அரிய புவி காந்தங்கள் உற்பத்தி திட்டம் ரூ.7,280 கோடி மதிப்பிட்டில் இந்த திட்டத்திற்க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆண்டுக்கு 1,200 மெட்ரிக் டன் காந்தம் தயாரிக்கும் வகையில் 5 தொழிற்சாலை அமைக்கப்படவுள்ளன. இதன் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுக்கு 6,000 மெட்ரிக்டன் அளவுக்கு உற்பத்தித் திறனை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும் மின்சார வாகனங்கள், விண்வெளித்துறை, மின்னணுசாதனங்கள். மருத்துவ உபகரணங்கள் மற்றும் பாதுகாப்புதுறை உபகரணங்களில் இந்த அரிய புவி காந்தங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இத்திட்டம் முழுமையான REPM உற்பத்தியை ஆதரிக்கிறது: அரிய பூமி ஆக்சைடுகளை மாற்றுதல் → உலோகங்கள் → உலோகக் கலவைகள் → அரிய புவி காந்தங்களின் இறுதி ஆக்கம். மொத்த திட்ட காலம்: 7 ஆண்டுகள் (அமைப்பிற்கு 2 ஆண்டுகள், ஊக்கத்தொகை வழங்கலுக்கு 5 ஆண்டுகள்)

