Tag: அய்யா வைகுண்ட சுவாமிகள்

சிறந்த நபர்கள்

அய்யா வைகுண்ட சுவாமிகள் வைகுண்ட சுவாமிகள் (1809-1851) கன்னியாகுமரிக்கு அருகில், இன்று சாமித்தோப்பு என்றழைக்கப்படும் சாஸ்தாகோவில்விளை எனும் கிராமத்தில் பிறந்தார். முடிசூடும் பெருமாள் என்ற இவரின் பெயருக்கு உயர்சாதி இந்துக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் அவரின் பெற்றோர் அவருடைய பெயரை முத்துக்குட்டி என மாற்றினார்.  வைகுண்டசுவாமிகள் ஆங்கிலஆட்சியையும் திருவிதாங்கூர் அரசரின் ஆட்சியையும் முறையே வெள்ளைப் பிசாசுகளின் ஆட்சியென்றும்" கறுப்புப் பிசாசுகளின் ஆட்சியென்றும் விமர்சித்தார். அவருடைய சமயவழிபாட்டு முறை 'அய்யாவழி' என்றறியப்பட்டது. அவருடைய கருத்துக்கள் அகிலத்திரட்டு என்ற நூலாகத் திரட்டப்பட்டுள்ளது.  1836ல் சமத்துவ சமாஜத்தை நிறுவினார். அவரது 194வது அவதார தினம்  மார்ச் 4, 2026 அன்று அனுசரிக்கப்பட்டது. 'தாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம்' என்பது அவரது கூற்றாகும்.