Tag: 3 லட்சம் டன் வெங்காயம் கொள்முதல்

தேசிய நிகழ்வுகள்

3 லட்சம் டன் வெங்காயம் கொள்முதல் வெங்காயத்தை கூடுதல் நாள்களுக்கு பதப்படுத்தி வைப்பதற்காக சோதனை அடிப்படையில் கதிரியக்க வழிமுறையை கையாள பாபா அணுசக்தி ஆய்வு மையத்துடன் சோதனை அடிப்படையில் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக நுகர்வோர் விவகாரத் துறை செயலர் ரோஹித் குமார் சிங் தெரிவித்தார். வழக்கமாக உணவுப் பொருள்களின் விலை அதிகரிக்கும்போது அவற்றில் விநியோகத்தை அதிகரித்து விலையைக் கட்டுக்குள் வைப்பதற்காக அவற்றை அரசு கொள்முதல் செய்து கையிருப்பு வைப்பது வழக்கமாகும். கொள்முதல் முதல் செய்யப்படும் வெங்காயத்தை நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் பாதுகாக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பாபா அணுசக்தி ஆய்வு மையத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தில் ”கோபால்ட் 60” தனிமத்தில் இருந்து வெளிப்படும் ”காமா” கதிர்வீச்சு மூலம் 150 டன் வெங்காயம் பாதுகாக்கப்பட இருக்கிறது. மகாராஷ்டிரத்தின் லாசல்கானில் இந்த சோதனை முயற்சி நடைபெறுகிறது என்றார். குறிப்பு வெங்காயம் உள்ளிட்ட உணவுப் பொருள்களை சில வகை கதிர்வீச்சுக்கு உள்படுத்தி பயன்படுத்துவது நுகர்வோருக்குப் பாதுகாப்பானது தான் என்று உலக சுகாதார அமைப்பும் (டபிள்யுஹெச்ஓ) அமெரிக்க உணவு-மருந்துப் பொருள்கள் சோதனை மையமும் (எஃப்டிஏ) தெரிவித்துள்ளது. உணவுப் பொருள்களை கதிர் வீச்சுக்கு உள்படுத்துவதால், அவற்றின் பயன்பாட்டுக் காலம் அதிகரிக்கிறது. அதனால், அவற்றின் விலை தொடர்ந்து கட்டுக்குள் இருக்கும்.