Tag: 2022-23-ஆம் ஆண்டில் நிதிப் பற்றாக்குறை 6.4%

பொருளாதாரம்

இந்தியப் பொருளாதாரத்தின் தற்போதைய போக்குகள் இந்திய பொருளாதார வளர்ச்சி 7.2% இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி விகிதம் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் 6.1 சதவீதமாக உள்ளது. ஒட்டுமொத்த நிதியாண்டில் (2022-23) இந்த வளர்ச்சி விகிதம் 7.2 சதவீதமாக இருந்ததாக தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021-22 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 9.1 சதவீதமாக இருந்தது. குறிப்பு GDP என்பது ஒரு நாட்டின் புவியியல் எல்லைக்குள் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில், பொதுவாக ஒரு வருடத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் இறுதி மதிப்பாகும். நாடுகளின் GDP தரவரிசையில் இந்தியா 5வது பெரிய பொருளாதாரமாக உள்ளது. 2022-23-ஆம் ஆண்டில் நிதிப் பற்றாக்குறை 6.4% தலைமை கணக்கு கட்டுப்பாட்டாளர் (சிஜிஏ) வெளியிட்ட புள்ளிவிவரத்தில் 2022-2023 ஆம் நிதியாண்டில், மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை ஏற்கெனவே மதிப்பிடப்பட்டபடி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 6.4 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. முந்தைய நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை 6.71 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது அது குறைந்துள்ளது. குறிப்பு நிதிப் பற்றாக்குறை = மொத்த செலவு – மொத்த வருவாய் (கடன்கள் தவிர்த்து)