Tag: ‘ஸ்மார்ட் வில்லேஜ்’ முன்னெடுப்பு

தேசிய செய்திகள்

இந்தியாவில் 100% எத்தனால் எரிபொருள் பயன்பாட்டுக்கு ஒப்புதல் சூழல்: இந்தியாவில் வாகனங்களில் 100சதவீத எத்தனால் எரிபொருளைப் பயன்படுத்த மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் கையொப்பமிட்டு ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் 100 சதவீத எத்தனால் எரிபொருளுக்கு சட்டப்பூர்வ ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.  வாகன உற்பத்தியாளர்களின் திட்டங்கள் இதன் மூலம் இந்தியாவில் 100 சதவீதம் எத்தனால் எரிபொருள் பயன்பாட்டு வாகனங்களுக்கு புதிய கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. மாருதி-சுசூகி, டொயோட்டா, ஹுண்டாய், எம்.ஜி. நிறுவனங் கள் அடுத்த ஒரு மாதத்துக்குள் இதற்கான வாகனங்களையும் அறிமுகப்படுத்த இருக்கின்றன என்றார். 100% எத்தனால் எரிபொருளின் அமைப்பு 100 சதவீத எத்தனால் எரிபொருள் என்று கூறப்பட்டாலும், அதில் 93 முதல் 95 சதவீதம் எத்தனால் இருக்கும்.  அத்துடன் பெட்ரோல் மற்றும் பிற வேதியியல் சேர்மானங்கள் இடம் பெறும். அப்போதுதான் வாகனத்தை 'ஸ்டார்ட் செய்வது எளிதாக அமையும். E20 வாகனங்களை மாற்றும் வசதி இப்போது இருக்கும் 20 சதவீத எத்தனால் கலப்பு எரிபொருள் வாகனங்களை 100 சதவீத எத்தனால் எரிபொருளுக்கு மாற்றுவது எளிதாக இருக்கும்.  100 சதவீத எத்தனாலுக்கு ஏற்பட வாகனங்களின் என்ஜின், எரிபொருள் அமைப்பு உள்ளிட்டவற்றில் மாற்றங்கள் இருக்கும். எனினும், மேற்காசிய போர் உள்ளிட்ட காரணங்களால் சுச்சா எண்ணெய் தட்டுப்பாடு விலை உயர்வு போன்ற பிரச்னைகளை எதிர்கொள்ள 100 சதவீத எத்தனால் என்பது காலப்போக்கில் சிறந்த தீர்வாக இருக்கும். இந்தியாவில் 100% எத்தனால் கலப்பு  100% எத்தனால் கலப்பு என்பது பெட்ரோலுக்குப் பதிலாகத் தூய எத்தனாலை எரிபொருளாகப் பயன்படுத்துவதைக் குறிக்கிறது. பெட்ரோலை விட எத்தனாலில் ஆற்றல் அளவு குறைவு என்பதால், எத்தனால் மூலம் இயங்கும் வாகனங்களில் மைலேஜ் மற்றும் செயல்திறன் குறைவாக இருக்கலாம். தற்போது இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள பெரும்பாலான வாகனங்கள் E20 எரிபொருள் (20% எத்தனால் மற்றும் 80% பெட்ரோல்) அல்லது அதற்கும் குறைவான கலவைகளில் இயங்கும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளன. E85 அல்லது E100 போன்ற அதிக எத்தனால் உள்ளடக்கம் கொண்ட எரிபொருட்களைப் பயன்படுத்த, 'ஃப்ளெக்ஸ்-ஃப்யூயல்' வாகனங்கள் தேவைப்படுகின்றன; இவ்வகையான வாகனங்கள் எத்தனால் மற்றும் பெட்ரோலின் பல்வேறு கலவைகளிலும் திறம்பட இயங்கக்கூடியவை. ஃப்ளெக்ஸ்-ஃப்யூயல் பற்றி அதிக எத்தனால் கலவைகளைப் பயன்படுத்தும் வாகனங்களுக்குப் பின்வரும் சிறப்பு அம்சங்கள் தேவைப்படுகின்றன: எத்தனாலால் ஏற்படும் அரிப்பை எதிர்க்கும் எரிபொருள் அமைப்புகள் எரிபொருள் விநியோகத்தைச் சரிசெய்வதற்கான சென்சார்கள் மற்றும் மின்னணு கட்டுப்பாட்டு அலகுகள் திறமையான எத்தனால் எரிப்புக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட என்ஜின்கள் உலக மற்றும் இந்தியச் சூழல் பிரேசில் போன்ற நாடுகள் நெகிழ்வு எரிபொருள் வாகனங்களைப் பெருமளவில் வெற்றிகரமாக ஏற்றுக்கொண்டுள்ளன. இந்தியாவில், அத்தகைய வாகனங்கள் இன்னும் குறைவாகவே உள்ளன; இருப்பினும், டொயோட்டா போன்ற நிறுவனங்கள் சில மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளன, மேலும் மாருதி சுசுகி மற்றும் ஹூண்டாய் ஆகியவை எதிர்காலத்திற்காகப் புதிய நெகிழ்வு எரிபொருள் வாகனங்களை உருவாக்கி வருகின்றன.   'ஸ்மார்ட் வில்லேஜ்' முன்னெடுப்பு சூழல்: அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றம் தனது 'ஸ்மார்ட் வில்லேஜ்' திட்டத்தின் ஒரு பகுதியாக,…