Tag: விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-56

அறிவியல்

விண்வெளி விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-56 சிங்கப்பூரின் 7 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-56 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. திட்டமிட்ட புவி வட்டப் பாதையில் செயற்கைக் கோள்கள் நிலைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து இத்திட்டம் வெற்றியடைந்ததாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வெளிநாட்டு செயற்கைக்கோள்களை வணிக ரீதியாக விண்ணில் செலுத்தி வருகிறது. அதன்படி, சிங்கப்பூருக்கு சொந்தமான “டி.எஸ்-சார்“ உள்பட 7 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்கு இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் அமைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இத்திட்டத்தில் முதன்மையாக செலுத்தப்பட்ட டிஎஸ்-சார் செயற்கைக்கோள் 352 கிலோ எடை உடையது. அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான இது, சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார் தொழில் நுட்பத்தில் இயங்கக்கூடியது. அனைத்துக் கால நிலைகளிலும் துல்லியமாக படங்களை எடுக்கும் திறன் கொண்டது.