Tag: வந்தே பாரத் ரயில் தயாரிப்பு

சர்வதேச நிகழ்வு

தொழில்நுட்ப இந்தியா : பிரதமர் மோடி நவீன தொழில் நுட்பங்களின் பயன்பாடு இந்தியாவை 2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த நாடாக மாற்றும் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். விமானப்படைக்கு ரூ. 6,828 கோடியில் 70 பயிற்சி விமானங்கள் மத்திய அமைச்சரவை ஒப்புதல் இந்திய விமானப் படைக்கு ரூ.6,828 கோடியில் 70 ஹெச்டிடி-40 ரக பயிற்சி போர் விமானங்களை வாங்குவதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ’ஹிந்துஸ் தான் ஏரோனாடிக்ஸ் (ஹெச்ஏஎஸ்) நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ஹெசிடிடி-40 ரக பயிற்சி போர் விமானங்களில் தற்போது 56 சதவீதம் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இயந்திர பாகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.  இதனை படிப்படியாக 60 சதவீதமாக உயர்த்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விமானக் கொள்முதல் மூலமாக நேரடியாக 1,500 பேருக்கும், மறைமுகமாக 3,000 பேருக்கும் வேலைவாய்ப்புகள் உருவாகும். வந்தே பாரத் ரயில் தயாரிப்பு ரஷிய – இந்திய கூட்டு நிறுவனம் குறைந்த தொகைக்கு ஏலம் 200 வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பு மற்றும் பராமரிப்புக்கான ரூ.58,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில், ரஷியாவின் சிஜேஎஸ்சி டிரான்ஸ்மேஸ் ஹோல்டிங் மற்றும் ரயில் விகாஸ் நிகம் (டிஎம்ஹெச் - ஆர்விஎன்எல்) கூட்டு நிறுவனம் தரப்பில் குறைந்த தொகைக்கு ஏலம் கேட்கப்பட்டுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன. கண்காணிக்கப்பட வேண்டிய திரள் நிதி தளங்கள் உலக அளவில் 2,80,984 கோடி ரூபாய் (34 பில்லியன் அமெரிக்க டாலர்) சந்தை மதிப்புடைய தொழிலாக உருவெடுத்துள்ள திரள் நிதி (க்ரவுட் ஃபண்டிங்) பெறும் முறை இந்தியாவிலும் வலுவாக வளர்ச்சி அடைந்துள்ளது. கோவிட் 19 நோய்த்தொற்றின்போது கடுமையாக பாதிக்கப்பட்ட விளிம்பு நிலை மனிதர்களின் சுகாதாரப் பாதுகாப்பிற்கும் அவசர காலங்களில் அவர்களுக்கு சிகிச்கை அளிக்கவும் சமூக ஊடகங்கள் பயன்பட்டன என்றும், இந்த சமூக ஊடகங்களின் மூலம் மருத்துவ வறுமை போக்கும் நிதி திரட்டும் உத்திகள் அதிகரித்தன என்றும் தரவுகள் கூறுகின்றன. அரசியலமைப்பின் 21 – ஆம் பிரிவின்படி ஒவ்வொரு  குடிமகனுக்கும் ஆரோக்கியம் என்பது அடிப்படை உரிமை அதிக மருத்துவக் கட்டணம் செலுத்த நேரிடும் இந்தியர்களின் பார்வை சமீப நாட்களில் கெட்டோ, மிலாப் போன்ற திரள் நிதி தளங்களை நோக்கித் திரும்பியுள்ளது.  மிலாப் திரள் நிதி தளத்தின் செயல்பாடுகளில் 90 % மருத்துவம் சார்ந்தது. மத்திய அரசின் சிந்தனைக் குழுவான ’நிதி ஆயோக்’ தனது 2021-ஆம் ஆண்டிற்கான மருத்துவக் காப்பீடு இல்லாது வாழும் 30 % பேர் அதிக செலவுடைய மருத்துவ நெருக்கடிக்குள்ளானால் வறுமை நிலைக்குத் தள்ளப்படும் அபாயத்தில் இருப்பதாக ஒப்புக் கொண்டுள்ளது. திரள் நிதி திரட்டும் தளங்கள், அவற்றின் மூலம் நிதி வழங்கும் நன்கொடையாளர்கள், நிதி பெறும் நிறுவனங்கள் போன்றோருக்கான பொறுப்புகள் குறித்து எவ்வித சட்டரீதியான கட்டுப்பாடுகளும் இல்லை. அரசின் திரள் நிதி தளக் கொள்கைகள் திரள் நிதி தளங்கள் வசூலிக்கும் சேவைக் கட்டணங்கள் பற்றிய விவரங்களட வழங்குவதையும், பகுதியளவு நிறைவு பெற்ற சிகிச்சைக்கு பின் எஞ்சியிருக்கும் நிதி பற்றிய தகவல்களை…