Tag: வந்தே பாரத் ரயிலை இயக்கிய முதல் பெண் ரயில் ஓட்டுநர்

சர்வதேச நிகழ்வு

இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில், ஆஸ்திரேலியாவுக்கு அணுசக்தியில் இயங்கும் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்களை வழங்குவதற்கான திட்டத்துக்கு அமெரிக்கா-பிரிட்டன்-ஆஸ்திரேலியா இடையிலான ’ஆக்கஸ்’ கூட்டணி ஒப்புதல் வழங்கியுள்ளது. AUKUS பற்றி: AUKUS, ஆஸ்திரேலியா, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா இடையே ஒரு முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் ஆகும். இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கு 15 செப்டம்பர் 2021 அன்று அறிவிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களைப் பெறுவதற்கு அமெரிக்காவும் இங்கிலாந்தும் ஆஸ்திரேலியாவுக்கு உதவும். முக்கிய நபர்கள் வந்தே பாரத் ரயிலை இயக்கிய முதல் பெண் ரயில் ஓட்டுநர் ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநரான சுரேகா யாதவ், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வந்தே பாரத் ரயிலை இயக்கிய முதல் பெண் ஓட்டுநர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். பிரதமர் மோடி கடந்த மாதம் தொடங்கி வைத்த மகாராஷ்டிரத்தின் சோலாப்பூரில் இருந்து மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் வரையிலான வழித்தடத்தில் வந்தே பாரத் ரயிலை முதன் முதலில் சுரேகா இயக்கினார். மேற்கு மகாராஷ்டிரத்தின் சாதாரா பகுதியைச் சேர்ந்த சுரேகா, கடந்த 1988-ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் ஆனார்.  ரயில்வேயில் இவரின் பங்களிப்பு மற்றும் சாதனைகளுக்காக மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு விருதுகளை சுரேகா வென்றுள்ளார்.