Tag: முழு உடல் பரிசோதனை உட்பட அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ.225 கோடியில் புதிய திட்டங்கள்

தமிழ்நாடு

ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினி, வெளிநாட்டுச் சுற்றுலா அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினி, வெளிநாட்டுச் சுற்றுலாவுடன், மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும் போன்ற புதிய திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ரூ.225 கோடியில் இந்தத் திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரும் என அவர் அறிவித்தார். நான் முதல்வன் திட்டம்,  மாணவ,  மாணவிகளை முதன்மையானவர்களாக உருவாக்குவதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம். உயர் கல்வியை மாணவியர் அனைவரும் பெற வேண்டும் என்பதற்காக புதுமைப் பெண் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.  மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டமே புதுமைப் பெண் திட்டம். அரசுப் பள்ளியில் படித்தவர்கள் தொழிற்கல்வியில் சேர 7.5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.  காலையில் பள்ளி மாணவர்களின் பசியைப் போக்கி அவர்கள் படிப்பதற்கு வசதியாக, முதல்வரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.  கைக்கணினி, முழு உடல் பரிசோதனை உட்பட அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ.225 கோடியில் புதிய திட்டங்கள் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கைக்கணினி, 3ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை உட்பட ரூ.225 கோடியில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோராக மாற்றும் திட்டம் சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குப்பை சேகரிப்பவர்களை தொழில் முனைவோர்களாக ஆக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி சார்பில் மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் தேசிய 'சஃபாய் கரம்சாரி' நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சென்னையில் பரவி வருவது “இன்ஃப்ளூயன்ஸா-ஏ“ வகை தொற்று  சென்னையில் அண்மைக்காலமாக பரவி வரும் காய்ச்சல் இன்ஃப்ளூயன்ஸா-ஏ வகை வைரஸ் தொற்று என்பது பொது சுகாதாரத்துறையின் ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக நுரையீரலில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆர்எஸ்வி வைரஸ் தொற்று பரவலாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விரு வைரஸ் தொற்றுகளும் பருவகாலத்தில் வழக்கமாக பரவும் ஓசல்டா மிவிர் எனப்படும் வைரஸ் எதிர்ப்பு மருந்து வழங்கலாம்.  தாய்மார்களுக்கு குடற்புழு நீக்க  மாத்திரை விநியோகம்  தேசிய குடற்புழு நீக்க நாள் ஆண்டுதோறும் பிப்ரவரி 10, ஆகஸ்ட் 10 ஆகிய தேதிகளில் கடைப்பிடிக்கப்படுகிறது. 19 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சிறாருக்கு ’அல்பெண்டசோல்’ எனப்படும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுவது வழக்கம். பெண்கள், தாய்மார்களுக்கும் விரிவுபடுத்தியிருப்பதாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் தெரிவித்தார். ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்களில் அந்த மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. குடற்புழு நீக்கத்தால் ரத்த சோகை பாதிப்பு நீங்குவதுடன் உடல் ஆரோக்கியமும், வலிமையும் மேம்படும். அரசு பள்ளி மாணவர்களுக்கு அல்பெண்டசோல் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.