Tag: முப்பரிமாண அச்சாக்க தொழில்நுட்பத்திலா் உருவான அஞ்சலகக் கட்டடம்

தினசரி தேசிய நிகழ்வு

முப்பரிமாண அச்சாக்க தொழில்நுட்பத்திலா் உருவான அஞ்சலகக் கட்டடம் இந்தியாவில் முதன்முறையாக முப்பரிமாண அச்சாக்க (3D பிரிண்டிங்) தொழில்நுட்பத்தில் உருவான அஞ்சலகக் கட்டடத்தை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் திறந்து வைத்தார். முப்பரிமாண அச்சாக்க தொழில்நுட்பத்தில் இந்தியாவில் முதன்முறையாக பெங்களூரு, அல்சூரில் உள்ள கேம்ப்ரிட்ஜ் லேஅவுட்டில் ரூ.26 லட்சம் செலவில் 43 நாள்களில் உருவாக்கப்பட்டுள்ளன. முப்பரிமாண அச்சாக்கம் முப்பரிமாண வடிவத்தில் உருவாக்கப்படும் கட்டடத்தின் வரைபடம் கணினி வழியாக உள்ளீடு செய்யப்படும். முப்பரிமாண அச்சாக்க தொழில்நுட்பத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான ரோபாட்டிக் அச்சு இயந்திரத்தின் மூலம் கான்கிரீட் கலவை செலுத்தப்படும். இந்த இயந்திரம் வரைபடத்தின் மாதிரியில் கான்கிரீட் கலவையை வரிவரியாக செலுத்திக்கொண்டே கட்டடத்தை உருவாக்கும். குறிப்பு இந்த தொழில்நுட்பத்தின்படி, சென்னை IIT வளாகத்தில் ஏற்கெனவே வீடு ஒன்று கட்டப்பட்டுள்ளது. ஆனால், பெங்களூரில் உருவாக்கப்பட்டுள்ள அஞ்சலகக் கட்டடம், முதல் பொதுத் துறை நிறுவனத்தின் கட்டடம் என்பது குறிப்பிடத்தக்கது.  தற்போது பெங்களூரில் 1,021 சதுர அடி பரப்பில் கட்டப்பட்டுள்ள அஞ்சலகக் கட்டடத்தை சென்னை IIT வழிகாட்டுதலில் லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் கட்டி முடித்துள்ளது.