Tag: மின் வேலிகள் அமைக்க முன் அனுமதி கட்டாயம்: வனத் துறை

தமிழ்நாடு

கோ-ஆப் பஜார் செயலி கூட்டுறவு நிறுவனங்களின் தயாரிப்புகளை சந்தைப்படுத்துவதற்கான கைப்பேசி செயலியழின் (COOP BAZAAR) செயல்பாட்டை, சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கிவைத்தார். கூட்டுறவு மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை மலிவான விலையில் இல்லங்களில் இருந்தபடியே இந்த செயலி மூலம் நுகர்வோர் எளிதாகப் பெற்றுக் கொள்ளலாம். குறைவான சேவைக் கட்டணத்துடன் செயலி அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. முதல்கட்டமாக 64 வகையிலான பொருள்களை செயலி மூலம் பெற முடியும். கிடைக்கும் பொருள்கள் திருச்செங்கோடு, ஈரோடு, பெருந்துறை, சென்னை சைதாப்பேட்டை, திருவல்லிக்கேணி, காஞ்சிபுரம் ஆகிய கூட்டுறவு சங்கங்களின் தயாரிப்புகளை செயலி மூலம் பெற முடியும். குறிப்பாக, மரச்செக்கு எண்ணெய் வகைகள், உயர்தர தேன், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், கொல்லிமலை காப்பித்தூள், சோப்பு வகைகள் என 44 வகை மளிகைப் பொருள்களைப் பெற முடியும். உயர்தர நுண்ணூட்டச் சத்துகள், உயிரி உரங்கள், உயிரி பூச்சிக் கொல்லிகள் என 64 கலப்படமற்ற தரமான தயாரிப்புகளையும் குறைந்த விலையில் பெறலாம். மின் வேலிகள் அமைக்க முன் அனுமதி கட்டாயம்:  வனத் துறை இதுதொடர்பாக தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: வன விலங்குகளைப் பாதுகாப்பதில் தமிழக அரசு அதீத ஈடுபாடு காட்டி வருகிறது. அதன்படி, சூரியசக்தி மின்வேலிகள் உள்ளிட்ட மின் வேலிகள் அமைக்க முன் அனுமதி பெறுவதும், ஏற்கெனவே அமைக்கப்பட்ட மின்வேலிகளைப் பதிவு செய்வதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த விதிகள், தமிழ்நாடு அரசால் அறிவிக்கை செய்யப்பட்ட காப்புக்காடுகளிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள விவசாய நிலங்களுக்கு மட்டுமே பொருந்தும். காப்புக்காட்டின் வனப்பகுதியிலிருந்து 5 கி.மீ. தொலைவுக்குள் ஏற்கெனவே மின் வேலிகளை அமைத்திருப்பவகர்கள் தங்கள் வேலிகளை சம்பந்தப்பட்ட மாவட்ட வன அலுவலரிடம் பதிவு செய்வது இனி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் வனத் துறை அலுவலர்கள் கொண்ட ஒரு கூட்டுக் குழு, பதினைந்து நாள்களுக்கு ஒருமுறை கள ஆய்வு செய்து, பதிவுப் புத்தகத்தில் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும். குறிப்பு குறிப்பு - வன உயிர் பாதுகாப்புச் சட்டம், 1972.