Tag: மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் உணவு அமைச்சர்கள் மாநாடு.

தினசரி தேசிய நிகழ்வுகள்

புது தில்லியில், மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் உணவு அமைச்சர்கள் மாநாடு. திறந்தவெளி சந்தை விற்பனைத் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு 60 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு மாநில உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி கோரிக்கை விடுத்துள்ளார். முக்கிய அம்சங்கள் தமிழ்நாட்டில் 2022-2023- ஆம் ஆண்டு காரீப் பருவத்தில் 1.9.2022 முதல் நெல் கொள்முதல் செய்ய அனுமதி அளித்ததை போல, வருகின்ற 2023-2024 காரீப் பருவத்தின் நெல் கொள்முதலை வருகிற செப்.1 முதல் தொடங்க அனுமதி அளிப்பதுடன், நிலுவையில் உள்ள கடந்த ஆண்டுக்கான மானியத் தொகைகளையும் விரைந்து வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் கோதுமை நுகர்வு அதிகரித்துள்ள நிலையில், 2022 மே வரை மாதத்துக்கு 30 ஆயிரத்து 648 மெட்ரிக் டன் கோதுமையை வழங்கி வந்த நிலையில், 2022 ஜுன் முதல் 8 ஆயிரத்து 532 மெட்ரிக்டன் கோதுமை மட்டுமே தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதனால் கூடுதலாக மாதமொன்றுக்கு 15 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமையை திறந்தவெளிச் சந்தை விற்பனைத் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டும். தற்போது தமிழ்நாட்டில் தருமபுரி, நீலகிரி மாவட்டங்களில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரிசிக்கு பதிலாக இரண்டு கிலோ ராகி வழங்கப்படுவதை போல, அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டத்தை விரிவுபடுத்த, போதுமான அளவு ராகி மற்றும் சிறுதானியங்களை மத்திய அரசு வழங்க வேண்டும். அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்துக்காகவும், மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டத்துக்காவும், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி ஒதுக்கீடு செய்யப்படுகின்ற அரிசியைக் காட்டிலும் 60 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி தேவைப்படுவதால், திறந்தவெளிச் சந்தை விற்பனைத் திட்டத்தில் கீழ் அதை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சுற்றுலா தலங்களாக கலங்கரை விளக்கங்கள் மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால், குஜராத்தின் துவாரகாவிலிருந்து இந்திய முழுவதும் உள்ள 75 வரலாற்றுச் சிறப்புமிக்க கலங்கரை விளக்கங்களை சுற்றுலாத் தலங்களாக மாற்றும் பிரச்சாரத்தைத் தொடங்கினார். முதலாவதாக குஜராத்தில் துவாரகா, கோப்நாத் மற்றும் வெராவல் ஆகிய இடங்களில் புதுப்பிக்கப்பட்ட மூன்று கலங்கரை விளக்கங்களை அவர் திறந்து வைத்தார். இந்த தொடக்க விழா பிரச்சாரத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. பிரச்சாரத்தின் முக்கியத்துவம்: இந்த பிரச்சாரத்தின் நோக்கம் இந்தியாவின் வளமான கலாச்சாரம், முக்கியத்துவம் மற்றும் அற்புதமான கட்டமைப்புகளை வெளிப்படுத்துவதாகும். இந்த வரலாற்றுத் தளங்கள் சுற்றுலாத் தலங்களாக வளர்ச்சியடைவதற்கும் மற்றும் சுற்றுலா மூலம் உள்ளுர் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்குமான ஆற்றலைக் கொண்டுள்ளன. குறிப்பு: 75வது மனதின் குரல் நிகழ்ச்சியில் கலங்கரை விளக்கங்களின் தனித்துவமான கவர்ச்சி மற்றும் சுற்றுலா தலங்களாக அவை இருக்கும் திறன் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசினார். இந்தியாவின் தனித்துவமான கலங்கரை விளக்கங்களை வசீகரிக்கும் சுற்றுலாத் தலங்களாக மாற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப இந்த பிரச்சாரம் உள்ளது. சர்வதேச பசுமை ஹைட்ரஜன் மாநாடு பசுமை ஹைட்ரஜன் குறித்த மூன்று நாள் சர்வதேச…