Tag: மணிப்பூர்: நிவாரண நடவடிக்கைகளை மேற்பார்வையிட 3 முன்னாள் பெண் நீதிபதிகள்

அரசியல் அறிவியல்

மக்கள் கருத்து  மணிப்பூர்: நிவாரண நடவடிக்கைகளை மேற்பார்வையிட 3 முன்னாள் பெண் நீதிபதிகள் மணிப்பூர் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம், மறுவாழ்வு வழங்கப்படுவதை மேற்பார்வையிட 3 முன்னாள் உயர்நீதிமன்ற பெண் நீதிபதிகளை உச்சநீதிமன்றம் நியமித்தது. இந்தக் குழுவினர் தங்களது அறிக்கையை உச்சநீதிமன்றத்துக்கு நேரடியாக தாக்கல் செய்வார்கள் என்றும், கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மக்களிடையே சட்டத்தின் மீது மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்த இந்த நடவடிக்கை உதவும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இந்த குழுவுக்கு ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி கீதா மித்தல் தலைமை வகிப்பார். மும்பை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஷாலினி பி ஜோஷி, தில்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆஷா மேனன் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெறுவர். மத்திய அரசாங்கம் - பொதுநலம் சார்ந்த அரசு திட்டங்கள், அவற்றின் பயன்பாடுகள் சிறு தானியங்கள் பயிரிட 50,000 ஏக்கர் நிலம் தமிழ்நாடு சிறுதானிய திட்டத்தின் கீழ் சிறு தானியங்கள் பயிரிட தமிழக அரசு 50,000 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்துள்ளதாக உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார். எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை (எம்.எஸ்.எஸ்.ஆர்.எஃப்) சார்பில், சென்னை தரமணியில் நடைபெற்ற சிறுதானியக் கண்காட்சியை தொடங்கி வைத்தார். குறிப்பாக, 20 மாவட்டங்களில் சிறு தானிய உற்பத்தியை பெருக்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சிறுதானியங்களை பொது விநியோக திட்டத்தின் கீழ் சேர்ப்பதால் சிறுதானிய விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர்வதுடன், சிறுதானிய உற்பத்தியும் பெருகி பொது மக்களின் உடல் நலமும் மேம்படும். பணியின்போது கட்டுமானத் தொழிலாளர் இறந்தால் உடலை எடுத்துச் செல்லும் செலவை அரசு ஏற்கும் கட்டுமானத் தொழிலாளர்கள் வெளிமாநில தொழிலாளர்கள் உட்பட பணியிடத்தில் விபத்தால் உயிரிழக்க நேரிட்டால் அவர்களது உடலை அந்த தொழிலாளியின் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல நிதியுதவி அளிப்பது தொடர்பான அறிவிப்பு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசனால் நிகழாண்டு மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வாழும் கட்டுமானத் தொழிலாளர்கள் பணியிடத்தில் விபத்தால் உயிரிழக்க நேரிட்டால் அவர்களின் உடலை உடல் கூறாய்வுக்கு பின்னர் மருத்துவமனையிலிருந்து அரசு அமரர் ஊர்தி மூலம் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதற்காக ஏற்படும் செலவினம் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தால், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் வாயிலாக வழங்கப்படும். மேலும், புலம்பெயர்ந்த கட்டுமானத் தொழிலாளர்கள் பணியிடத்தில் விபத்தால் உயிரிழக்க நேரிட்டால் அவர்களின் உடலை, உடல் கூராய்வுக்குப் பின்னர், அரசு அமரர் ஊர்தி, ரயில் அல்லது விமானம் மூலம் சொந்த ஊருக்கு எடுத்து செல்வதெனில் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் நிதியுதவியாக சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் வாயிலாக, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தால் வழங்கப்படும் 86,000 பேருக்கு சிறப்பு தடுப்பூசி முகாம் மத்திய அரசின் “இந்திரதனுஷ் 5.0“ திட்டத்தின் கீழ் விடுபட்ட 86 ஆயிரம்…