Tag: புதிய பொருளாதார கொள்கை

பொருளாதாரம்

புதிய பொருளாதார கொள்கை 50-வது ஜிஎஸ்டி கவுன்சில்  ஜிஎஸ்டி கவுன்சிலின் 50-ஆவது கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தில்லியில் நடைபெற்றது. அதில் மாநில நிதியமைச்சர்கள், மத்திய நிதியமைச்சக உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இணையவழி விளையாட்டுகள், குதிரைப்பந்தயங்கள், கேசினோ விளையாட்டுகள் ஆகியவற்றுக்கு அதிகபட்ச ஜிஎஸ்டி விகிதமான 28 சதவீதத்தை விதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அந்த விளையாட்டுகளில் ஈடுபடுவோரின் பந்தய தொகையில் 28 சதவீதமானது ஜிஎஸ்டியாக வசூலிக்கப்படும். இணைவழி விளையாட்டுகளில் திறன் சார்ந்தவை, வாய்ப்பு சார்ந்தவை என்ற வேறுபாடு முற்றிலுமாகக் களையப்படுகிறது. இணையவழி விளையாட்டுகளை ஜிஎஸ்டி சட்ட வரம்புக்குள் கொண்டுவருவதற்கான சட்டத் திருத்த மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்படும். இணையவழி விளையாட்டுகளுக்கு ஜிஎஸ்டி விதிப்பது தொடர்பாகக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் மத்திய தகவல்-தொழில் நுட்ப அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து செயல் பட ஜிஎஸ்டி கவுன்சில் முடிவெடுத்துள்ளது. கோவா, சிக்கிம் மாநில சுற்றுலாத் துறையில் கேசினோ முக்கியப் பங்கு வகித்து வருகிறது. ஜிஎஸ்டி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயங்கள் அமைக்க ஜிஎஸ்டி கவுன்சிலின் 50-ஆவது கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. ஜிஎஸ்டி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயங்களை அமைக்க கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. முதல்கட்டமாக, மாநிலத் தலைநகரங்களில் அந்தத் தீர்ப்பாயங்கள் அமைக்கப்படும். பின்னர், படிப்படியாக மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். ஜிஎஸ்டி விலக்கு: தனிநபரால் இறக்குமதி செய்யப்படும் “டைனடக்சிமேப்” புற்றுநோய் சிகிச்சை மருந்து அரிய நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் சிறப்பு உணவுகள் தனியார் நிறுவனங்கள் வழங்கும் செயற்கைக்கோள் ஏவுதல் சேவைகள் நூல் மீதான ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. அமலாக்கத் துறை வரம்பில் ஜிஎஸ்டி: ஜிஎஸ்டி முறையை சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை சட்டத்தின் வரம்புக்குள் கொண்டு வருவது தொடர்பாக மத்திய அரச அண்மையில் அறிக்கை வெளியிட்டது. அதன்படி, தொழில் நிறுவனங்கள் மீது ஜிஎஸ்டி சார்ந்த சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை குற்றச்சாட்டு எழுந்தால், அது தொடர்பாக அமலாக்கத் துறையானது சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனத்திடம் விசாரணை நடத்த முடியும். ஜிஎஸ்டி பற்றி மத்திய சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் - 2017 ஆனது 101-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமாக நிறைவேற்றப்பட்டது. ஜிஎஸ்டி சட்டங்கள் - ஜூலை 1, 2017 அன்று அமல்படுத்தப்பட்டன. சிறப்பு அஞ்சல் தலை, உறை வெளியீடு சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சிலின் 50-ஆவது கூட்டத்தையொட்டி, சிறப்பு அஞ்சல் தலையையும் சிறப்பு உறையையும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். நிதியமைச்சர் வெளியிட்ட இந்த ரூ.5 சிறப்பு அஞ்சல் தலை தனிப்பயனாக்கப்பட்ட ”எனது அஞ்சல் தலை” (மை ஸ்டாம்ப்) ஆகும். ஜிஎஸ்டி கவுன்சிலால் வடிவமைக்கப்பட்டு, இந்திய அஞ்சல் துறை மூலம் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. சிறப்பு அஞ்சல் உறையில் ஜிஎஸ்டி தொடங்கப்பட்டதை நினைவுபடுத்தும் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. கடந்த 2017, ஜுலை 1-ஆம் தேதி நாட்டின் மறைமுக வரியில் மிகப்பெரிய மாற்றம் கொண்டுவரப்பட்டு ஜிஎஸ்டி வரி அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும், பிரதமர் நரேந்திர…