Tag: புதிய அறிவியல் ஆய்வகங்கள் /ஆய்வகங்கள்/மையங்கள்

அறிவியல்

புதிய அறிவியல் ஆய்வகங்கள் /ஆய்வகங்கள்/மையங்கள் இந்தியாவின் முதல் ட்ரோன் பொது சோதனை மையம் சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் விரைவில் ட்ரோன்களுக்கான பொது சோதனை மையம் அமைக்கப்பட உள்ளது என தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார். தமிழகத்தில் ஆளில்லா விமானம் தயாரிக்கும் தொழில் நிறுவனங்களானது, மோட்டார்கள், பேட்டரி உள்ளிட்ட பல்வேறு பாகங்களை தனித்தனி மையங்களில் சோதனை செய்து வருகின்றன. இது செலவினத்தை அதிகரிப்பதுடன், சோதனைகளை மேற்கொள்ள காலதாமதமும் ஆகிறது.  இந்த இடர்பாடுகளைக் களையும் நோக்கத்துடன் மத்திய அரசின் பாதுகாப்பு உட்கட்டமைப்பு சோதனைத் திட்டத்தின் கீழ், இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த ட்ரோன் சோதனை மையத்தை அமைக்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ) திட்டமிட்டுள்ளது. இந்தச் சோதனை மையம், ஆளில்லா விமானத்தின் ஆராய்ச்சி, வடிவமைப்பு, மேம்பாடு, உற்பத்தி மற்றும் சோதனைகளுக்குத் தேவையான பல்வேறு வசதிகளை ஒரே இடத்திலேயே சர்வதேச தரத்தில் வழங்கும். இதன் மூலம், இந்தியாவின் முதல் ட்ரோன் விமான சோதனை மையம் என்ற பெருமையை வல்லம் வடகாலில் அமையவுள்ள மையம் பெறவுள்ளது. பாதுகாப்பு சோதனை உள்கட்டமைப்பு திட்டம் (DTIS) பற்றி உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் விண்வெளி உற்பத்தியை அதிகரிக்க இது தொடங்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சகம் (MoD) இந்த திட்டத்தை மே 08, 2020 அன்று தொடங்கியுள்ளது.