Tag: பாதுகாப்பு அமைச்சகம் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட OS-க்கு மாறுகிறது

அறிவியல்

ஊடகம் மற்றும் தொலைதொடர்பு பாதுகாப்பு அமைச்சகம் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட OS-க்கு மாறுகிறது நாடு முழுவதும் பாதுகாப்பு மற்றும் முக்கியமான உள்கட்டமைப்பு மீதான சைபர் மற்றும் தீம்பொருள் (malware) தாக்குதல்கள் அதிகரித்து வருவதால், இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து கணினிகளிலும் உள்ள மைக்ரோசாஃப்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை (OS) உள்நாட்டில் உருவாக்கப்பட்ட புதிய OS, மாயாவுடன் மாற்ற பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.  இது திறந்தவெளி மூலமான Ubuntu-வை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த அமைப்புகளில் 'சக்ர வியுக்' (Chakravyuh) என்ற 'end point detection and protection system'' எனும் பாதுகாப்பு அமைப்பு நிறுவப்பட்டு வருகிறது. குறிப்பு மாயா ஆறு மாதங்களில் அரசு மேம்பாட்டு நிறுவனங்களால் உருவாக்கப்பட்டது. மாயா மால்வேர் தாக்குதல்கள் மற்றும் பிற சைபர் தாக்குதல்களைத் தடுக்கும் திறன் கொண்டது.