Tag: நிதி ஆயோக் ஆய்வு : வறுமையிலிருந்து மீட்சி

பொருளாதாரம்

குறியீடுகள் ”ஏற்றுமதி தயார்நிலை குறியீடு 2022”  நிதி ஆயோக் வெளியிட்ட ”ஏற்றுமதி தயார்நிலைக் குறியீடு 2022”- இல் தமிழகம் 80.89 மதிப்பெண்களுடன் முதலிடம் பெற்றுள்ளது. முந்தைய 2 ஆண்டுகளாக முதலிடம் பெற்ற குஜராத், 4-ஆவது இடத்துக்குப் பின் தங்கியது. மாநிலங்களின் ஏற்றுமதிக்கான வாய்ப்புகள், செயல்திறன் ஆகியவற்றை மதிப்பிடும் வகையில் ஏற்றுமதி தயார்நிலைக் குறியீட்டை நீதி ஆயோக் அமைப்பு வெளியிட்டு வருகிறது. தொடர்ந்து, மகாராஷ்டிரம், கர்நாடகம், உள்ளிட்ட மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன. அளவீடுகள்: ஏற்றுமதிக்குச் சாதகமான சூழலை உருவாக்குதல், ஒழுங்காற்று அமைப்பை எளிமைப்படுத்துதல், தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல்.  ஏற்றுமதி செய்யும் மாவட்டங்களில் குஜராத்தின் ஜாம்நகர் முதலிடத்தைப் பெற்றுள்ளது. நிதி ஆயோக் ஆய்வு : வறுமையிலிருந்து மீட்சி தேசிய பல பரிமாண வறுமையின் இரண்டாவது பட்டியலை நீதி ஆயோக் வெளியிட்டது. ஐந்து ஆண்டுகளில் 13.5 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் பலபரிமாண வறுமையில் இருந்து மீண்டுள்ளதாகவும், இதில் உத்தர பிரதேசம், பிகார், மத்திய பிரதேச மாநிலங்களில் வறுமையில் இருப்பவர்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருவதாகவும் நீதி ஆயோக்கின் ஆய்வு அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015-16-இல் 24.85 சதவீதமாக இருந்த பல பரிமாண வறுமையின் குறியீடு 2018-21 இல் 14.96 சதவீதமாக குறைந்துள்ளது. நகர்ப்புறங்களை ஒப்பிடுகையில் கிராமப்புறங்களில் வறுமையில் இருந்து மீள்பவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. சுகாதாரம், ஊட்டச்சத்து, சமையல் எரிபொருள், குடிநீர், மின்சாரம் ஆகியவை மக்களுக்கு சென்றடைவதை அரசு மேம்படுத்தியதால் வறுமையில் இருந்து பலர் வேகமாக மீண்டுள்ளனர். இந்தியாவின் பல பரிமாண வறுமை ஒழிப்பை 2030-க்குள் பாதியாக குறைக்க வேண்டும் என்ற இலக்கை முன்கூட்டியே எட்டிவிடலாம் என்று நீதி ஆயோக்கின் தலைமைச் செயல் அதிகாரி பி.வி.ஆர்.சுப்பிரமண்யம் நம்பிக்கை தெரிவித்தார். சுகாதாரம், கல்வி, வாழ்க்கைத் தரம் உயர்வு, ஊட்டச்சத்து, குழந்தைகள் மற்றும் இளம்பருவ இறப்பு, கர்ப்பிணிகளின் ஆரோக்கியம், மாணவர்களின் பள்ளி வருகை நாள்கள், சமையல் எரிப்பொருளின் வகை, குடிநீர், மீன்சாரம், குடியிருப்பு, சொத்துகள், வங்கிக் கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையில் பல பரிமாண வறுமை பட்டியல் கணக்கிடப்படுகிறது. குறிப்பு ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அண்மையில் வெளியிட்ட புள்ளிவிவரங்களில் 2005 முதல் 2021 வரையில் இந்தியாவில் 41.5 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.