Tag: “நான் முதல்வன்” திட்டத்தில் போட்டித்  தேர்வு பிரிவு

தமிழ்நாடு

கிராம மக்களின் வருவாய்க்கு முக்கியத்துவம் கிராம மக்களின் வருமானத்தை அதிகரிக்கும் திட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். “கள ஆய்வில் முதல்வர்” திட்டத்தின் கீழ்,  ஆட்சியர்களுடனான ஆய்வுக் கூட்டம்  நடைபெற்றது. இந்த அரசின் முக்கியமான புதிய திட்டங்கள் அனைத்திலும் ஓங்கி ஒலிப்பது சமூக நீதியின் குரலாகவே இருக்கும்..  அனைவருக்குமான பொருளாதார வளர்ச்சி, இளைஞர்களுக்கான திறன் மேம்பாடு, பெண் கல்வி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தமிழ் மொழியின் தொன்மைகளைப் போற்றிப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லுதல் போன்ற பணிகளுக்கு அரசின் புதிய திட்டங்களில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கிராமப்புற மக்களின் வருமானத்தை அதிகரிக்கவும், வாழ்வாதாரத்தை உயர்த்தவும், செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்சிசித் திட்டம் ஆகியவற்றில் நல்ல முன்னேற்றம் ஏற்பட வேண்டும்.  வேலை உறுதித் திட்டத்தின் கீழ், வேலை வழங்கப்படக்கூடிய சராசரி நாள்களை உயர்த்துவதற்குத் தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். “நான் முதல்வன்” திட்டத்தில் போட்டித்  தேர்வு பிரிவு “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ், போட்டித் தேர்வுப் பிரிவை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின், செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கவுள்ளார். நான் முதல்வன் திட்டத்தின் கீழ், போட்டித் தேர்வுகளட பிரிவு தொடங்கப்படுவதன் மூலம் ரயில்வே, வங்கி, டி.என்.பி.எஸ்.சி, யு.பி.எஸ்.சி உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தமிழ் நாடு  முழுவதும் சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.  இந்தத் திட்டம் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தொடங்கப்படவுள்ளது. சமூக நீதிதான் திராவிட இயக்கத்தின் ஒரே குறிக்கோள் தமிழகத்தின் சமூக நீதி வரலாற்றில் வீரம் மிகுந்த போராட்டங்களில் ஒன்றான தோல்சீலை போராட்டத்தின் 200 –ஆவது ஆண்டு நிறைவு  தமிழ்ச் சமூகம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பண்பாட்டில் செழித்து நின்றதை யாரும் மறுக்க முடியாது.  அதைத் தான் நமக்கு “கீழடி” வெளிப்படுத்தியுள்ளது. அருட்பிரகாச வள்ளலார், அய்யா  வைகுண்டர், அயோத்திதாச பண்டிதர், பெரியார் ஆகியோர் நடத்திய சீர்திருத்த இயக்கங்கள்தான் தமிழகத்தை தலைநிமிரச் செய்துள்ளன.  பக்தி வேறு- பாகுபாடு வேறு என்பதை உணர்த்தியவர்கள் இந்தத் தலைவர்கள்.