Tag: நலத்திட்டங்கள் ஜல் தீபாவளி பிரச்சாரம் அறிமுகம்

அரசியல் அறிவியல்

நலத்திட்டங்கள் ஜல் தீபாவளி பிரச்சாரம்  அறிமுகம் மத்திய நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதி  அமைச்சகமானது  (MoHUA) ‘ஜல் தீபாவளி – பெண்களுக்கு தண்ணீர், தண்ணீருக்காக பெண்கள்’ விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. அடல் மறுசீரமைப்பு மற்றும் நகர்ப்புற மாற்ற இயக்கத்தின் (AMRUT) கீழ் இந்த பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. AMRUT என்பது தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்துடன் (NULM) இணைந்துள்ள MoHUA இன் முதன்மைத் திட்டமாகும். ஒடிசா நகர்புற  அகாடமி இந்த பிரச்சாரத்தை செயல்படுத்த உதவும் முதன்மை நிறுவனமாகும். இந்த பிரச்சாரத்தின் நோக்கம் - நீர் நிர்வாகத்தில் பெண்களை மேம்படுத்துவதாகும். வாசிப்பு இயக்கம் தமிழ்நாடு மாநிலக் கல்வித் துறையின் மூலம் வாசிப்பு இயக்கத்தின் கீழ் 53 புத்தகங்களின் தொகுப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. வாசிப்பு இயக்கம் பற்றி தொடக்கம்  –11 மாவட்டங்களில் ஜூலை 2023ல் தொடங்கப்பட்டது. குறிக்கோள் - அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வாசிப்பை மிகவும் விரும்பத் தக்கதாகவும்  அணுகக்கூடியதாகவும் மாற்றுதல் புத்தகங்கள் நான்கு நிலைகளாகப் பிரிக்கப்பட்டு மாணவர்களின் அடுத்தடுத்த நிலைகளில்  வாசிப்பு திறன்கள்  அதிகரிக்கப்படுகின்றன. இல்லம் தேடி கல்வி திட்டத்தின் தன்னார்வலர்களால் நூலக பாடவேளைகளில்  குழந்தைகளுக்கு புத்தகங்கள் வழங்கப்படுகின்றன