Tag: தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை நிறுவ ஒப்புதல்

அரசியல் அறிவியல்

அரசு நலத்திட்டங்கள் இயற்கை உரங்களுக்கு மானியம்  தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் நடைபெற்றது. PM-PRANAM மண் பாதுகாப்பு மற்றம் உரங்களின் சமநிலையான பயன்பாட்டை ஊக்குவிக்கும் ”பிஎம் பிரணாம்” (பூமித்தாய்க்கு புத்துயிரூட்டல், விழிப்புணர்வு, உற்பத்தி, ஊட்டச்சத்து மற்றும் மேம்பாடு) திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், மாற்று உரங்களை ஏற்கும் மாநிலங்கள், ரசாயன உரங்களின் பயன்பாடு குறைவால் கிடைக்கும் மானிய சேமிப்புத் தொகை மூலம் ஊக்குவிக்கப்படும்.  உதாரணமாக 10 லட்சம் டன் ரசாயன உரங்களை பயன்படுத்தும் ஒரு மாநிலம், அதனை 3 லட்சம் டன்னாக குறைக்கும் பட்சத்தில், மானியத்தில் ரூ.3,000 கோடி சேமிக்கப்படும்.  இதில் 50 சதவீத தொகை, மாற்று உரங்கள் ஊக்குவிப்பு மற்றும் இதர வளர்ச்சிப் பணிகளுக்காக மாநிலங்களுக்கு அளிக்கப்படும். பிஎம்-பிரணாம் திட்டம், 2023-24 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோவர்தன் திட்டம் கோவர்தன் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட உயிரி எரிவாயு ஆலைகளில் பகுதி பொருளாக உற்பத்தி செய்யப்படும் இயற்கை உரங்களின் சந்தைப்படுத்துதலுக்காக மானியத் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, டன் ஒன்றுக்கு ரூ.1,500 மானியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை நிறுவ ஒப்புதல்: நாட்டின்  அறிவியல், தொழில் நுட்பத் துறையில் ஆய்வுகளுக்கு நிதியளிக்கும் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையை நிறுவ மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இந்தியாவில் முதல் முறையாக இணையம் மூலம் மண் வள விவரம் மண் வளத்தை அறிந்து அதற்கேற்ப உரமிடும் முறையை ஊக்குவிக்க, “தமிழ் மண்வளம்” என்ற இணையப் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விளை நிலங்களின் மண்வளத்தை மேம்படுத்தும் பொருட்டு, தமிழ் மண்வளம் என்ற இணைய முகப்பு உருவாக்கப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின்படி, இணைய முகப்புப் பக்கம் (www. Tnagriculture.in/mannvalam) தொடங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் கணினி மூலமாகவோ அல்லது கைப்பேசி வழியாகவோ இணையதள முகவரியில் தமிழ் மண் வளம் இணையதளத்தை அணுகலாம். இதில், விவசாயிகள் தங்களது மாவட்டம், வட்டாரம், கிராமம், நிலத்தின் புல எண், உட்பிரிவு எண் ஆகியவற்றைப் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்தால், உடனடியாக மண் வளம் குறித்த அனைத்து விவரங்களையும் பதிவிறக்கம் செய்யலாம். மேலும், மண்வள அட்டை மின்னணு வடிவில் கிடைக்கப் பெறும். மண்ணுக்கேற்ற மகசூல்:  வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் காடுகள் சார்ந்த எவ்வகை பயிர்களை சாகுபடி செய்யலாம், தேர்ந்தெடுக்கும் பயிர்களுக்கு எவ்வளவு உரங்களை இட வேண்டும் என்பன போன்ற விவரங்களையும் விவசாயிகள் தெரிந்து கொள்ளலாம். இத்தகைய இணையப் பக்கம் இந்தியாவிலேயே முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நெட்டே நெட்டே பனைமரமே: பனை சிறப்பைப் போற்றும் வகையில், தூத்துக்குடி, ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் பனை குறித்த கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த அய்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், சேகரிக்கப்பட்ட செய்திகளை உள்ளடக்கி ”நெட்டே நெட்ட பனைமரமே” என்ற தலைப்பில் புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது முதல்வர்…