Tag: தற்போதைய சமூக பொருளாதார சிக்கல்கள்

பொருளாதாரம்

தற்போதைய சமூக பொருளாதார சிக்கல்கள் பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை பாசுமதி அல்லாத பிற வகைகளைச் சேர்ந்த வெள்ளை நிற அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படுகிறது. அந்த வகை அரிசியை பாதியளவில் குத்தியது, முழுவதுமாக குத்தியது, தீட்டப்பட்ட அரிசி என எந்த வடிவிலும் ஏற்றுமதி செய்யக்கூடாது. அதே நேரத்தில் ஏற்கெனவே, ஏற்றுமதிக்காக கப்பல்களில் ஏற்றப்பட்டுவிட்ட அரிசிக்கு இந்தத் தடை பொருந்தாது. எனினும், மத்திய அரசு சில அசாதாரண சூழல்களில் இந்தத் தடையில் இருந்து விலக்கு அளிக்கும். முக்கியமாக பிற நாடுகளின் உணவுப் பாதுகாப்பு தொடர்பான விஷயம் மற்றும் பிற நாடுகளின் கோரிக்கைகள் அடிப்படையில் அரிசி ஏற்றுமதித் தடையில் இருந்து தளர்வுகள் அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரிசி விலை வேகமாக உயர்ந்து வருகிறது. சில்லறை விற்பனையில் அரிசி விலை கடந்த ஓராண்டில் 11.5 சதவீதம் அதிகரித்துள்ளது. அதுவும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் விலை 3 சதவீதம் அதிகரித்துள்ளது. பண்டிகை காலம் வருவதால் உள்நாட்டில் அரிசிக்கான தேவையும் அதிகரிக்கும். இந்த நிலை தொடர்ந்தால் உள்நாட்டில் விலையைக் கட்டுக்குள் வைக்க முடியாத நிலை ஏற்படும் என்பதால் அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  கடந்த ஆண்டு பாசுமதி அல்லாத வெள்ளை அரிசி வகைகள் மீது 20 சதவீத ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டது. எனினும், அரிசி ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வந்ததே தவிர குறையவில்லை.  நாட்டின் மொத்த அரிசி ஏற்றுமதியில் பாசுமதி அல்லாத வெள்ளை அரிசி வகைகள் 25 சதவீதம் உள்ளன. குறியீடுகள் ஹென்லி பாஸ்போர்ட் (கடவுச்சீட்டு) குறியீடு இந்த குறியீடானது உலக நாடுகளின் கடவுச்சீட்டுகளை அவற்றினை வைத்திருப்பவர்கள் முன் விசா (நுழைவு இசைவு) இல்லாமல் அணுகக்கூடிய இடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பட்டியலிடுகிறது. குடியிருப்பு மற்றும் குடியுரிமைத் திட்டத்தில் உலகளாவிய முன்னணி நிறுவனமான ஹென்லி & பார்ட்னர்ஸால் இந்த குறியீடு வெளியிடப்பட்டது. முக்கிய அம்சங்கள் 192 உலக நாடுகளுக்கு விசா இல்லாமல் நுழைய அனுமதிக்கும் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டைப் பெற்ற நாடாக சிங்கப்பூர் ஜப்பானை பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் உள்ளது. 57 இடங்களுக்கு விசா இல்லாத பயணத்தை அனுமதிக்கும் வகையில் இந்தியா 80வது இடத்தில் உள்ளது. இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு உலகம் முழுவதும் உள்ள 177 இடங்களுக்கு நுழைவதற்கு விசா தேவை.