Tag: தமிழ்நாடு மாநில பறவைகள் ஆணையம்

புவியியல்

சுற்றுசுழல் மற்றும் சுழலியல் 1.83 லட்சம் ஆலிவ் ரிட்வீ ஆமைக் குஞ்சுகள் தமிழகம் முழுவதும் 2022-23-இல் 1.83 லட்சம் ஆமைக் குஞ்சுகள் பொரிக்கப்பட்டு கடலில் விடப்பட்டுள்ளன என தமிழக கற்றுசூழல், வனத்துறை செயலர் சுப்ரியா சாஹு தெரிவித்தார். டிசம்பர் முதல் ஏப்ரல் வரை தமிழக கடலோரப் பகுதிகளில் கடல் ஆமைகள் முட்டையிடுவது வழக்கம். இந்த முட்டைகளை விலங்குகளும், பறவைகளும் சிதைப்பதால், தமிழக கடல் பகுதிகளில் கடல் ஆமை இனம் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதைத் தடுக்கும் வகையில் ஆமை முட்டைகள் வனத் துறையினர் மூலம் சேகரிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் உள்ள கடல் ஆமை முட்டை பாதுகாப்பு மையங்களில் உள்ள பொரிப்பகங்களில் அடை காத்து பொரிக்கப்பட்ட பின் கடலில் விடப்பட்டு வருகின்றன. இந்தப் பருவத்தில் 35 ஆமைக் குஞ்சு பொரிப்பகங்கள் மூலம் 1,83,497 ஆமைக் குஞ்சுகள் பொறிக்கப்பட்டு கடலில் விடப்பட்டுள்ளன. தமிழ்நாடு மாநில பறவைகள் ஆணையம் பறவைகளில் பாதுகாப்பை வலுப்படுத்த தமிழ்நாடு மாநில பறவை ஆணையத்தை அமைத்துள்ளது. மாநிலத்தில் 17 பறவைகள் சரணாலயங்கள் உள்ளன, அவற்றில் 14 ராம்சார் தளங்களாகும். நோக்கம் பறவைகள் சரணாலயங்கள் கூடு கட்டுவதற்கான நிலைமைகளை மேம்படுத்துவதற்கும், புதிய இடங்களை வரைபடமாக்குவதற்கும், சரணாலயங்களின் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கும், சமூகம் சார்ந்த சுற்றுச்சூழல் சுற்றுலா மூலம் பார்வையாளர்களின் வசதிகளை மேம்படுத்துவதற்கும் ஒருங்கிணைக்கப்பட்ட மேலாண்மைத் திட்டங்களை இந்த ஆணையம் மேற்கொள்ளும். குறிப்பு: சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை செயலர் சுப்ரியா சாஹு ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட இந்த ஆணையத்தின் தலைவராக இருப்பார். இது புதிய பாதுகாக்கப்பட்ட பகுதிகளை உருவாக்குவதற்கான செயல் திட்டத்தை தயாரிப்பதற்காக, பூர்வீக மற்றும் புலம்பெயர்ந்த பறவைகள் பார்வையிடும் தமிழ்நாட்டின் பல்வேறு புவியியல் இடங்களை வரைபடமாக்கும். ரெட் ஹில்ஸ் நீர்த்தேக்கத்தைச் சுற்றி மியாவாகி காடுகள் நகரின் குடிநீர் விநியோகத்தின் முக்கிய ஆதாரமான ரெட் ஹில்ஸ் நீர்த்தேக்கம், அதைச் சுற்றிலும் தொடர்ந்து பச்சைப் போர்வைகளைப் பெற்று வருகிறது. ஒருங்கிணைந்த முயற்சிகளில் தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து நீர்வளத்துறை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்ட நிலத்தில் மியாவாகி நகர்ப்புற காடுகளை மேம்படுத்தி வருகிறது. ஏரியின் பின்புறம் மற்றும் சூரப்பேட்டையில் உள்ள இன்டேக் டவர் அருகே இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. அங்கு கிட்டத்தட்ட 55 நாட்டு மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. நீர்வளத்துறை நிலத்தில் பசுமை மண்டலத்தை உருவாக்கி, சூழலியல் சுற்றுலா தளமாக மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.