Tag: “டிஜிக்ளைம்“ எண்ம முறை வசதி

தினசரி தேசிய நிகழ்வுகள்

சந்திரயான் 3 விண்கலம் 2023 ஆம் ஆண்டின் மத்தியில் ஏவப்படும்: இஸ்ரோ இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவர்  எஸ். சோமநாத்  இந்தியாவின் மூன்றாவது நிலவுப்  பயணமான சந்திரயான்-3 மற்றும் முதல் சூரியப் பயணமான ஆதித்யா L1 2023 ஆம் ஆண்டின் மத்தியில் ஏவப்படும் என்று தெரிவித்தார்.   அகமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தில் (PRL) ஏற்பாடு செய்யப்பட்ட 4வது இந்திய கிரக அறிவியல் மாநாட்டில் "விண்வெளி மற்றும் கிரக ஆய்வுக்கான இந்திய திறன்கள்" எனும் தலைப்பில் பேசிய அவர்  இந்தியாவின் முதல் சோலார் மிஷனான ஆதித்யா-L1, "மிகவும் தனித்துவமான சூரிய கண்காணிப்பு திட்டமாக  இருக்கும், அதற்கான கருவிகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன, மேலும் இஸ்ரோ அவற்றை செயற்கைக்கோளில் ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.  மேலும் , சந்திரயான்-3  பணியானது, சந்திரனின்  மேற்பரப்பில் பாதுகாப்பாக தரையிறங்குதல் மற்றும் உலாவுதல் ஆகியவற்றில் end to end வரையிலான திறனை வெளிப்படுத்துகிறது என்று கூறினார் . “டிஜிக்ளைம்“ எண்ம முறை வசதி விவசாயிகள் பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையை விரைவாக பெறும் வகையில், தேசிய பயிர்க் காப்பீடு இணையதளம் மூலம் இழப்பீட்டுத் தொகையை பெறுவதற்கான 'டிஜிக்ளைம்' எண்ம முறை வசதியை மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர்  தொடங்கி வைத்தார்.  பிரதமரின் பசல் பீமா  யோஜனா என்கிற பயிர்க் காப்பீட்டுத் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. பயிருக்கு சேதம் ஏற்படும் பட்சத்தில் விவசாயிகள் இழப்பீட்டுத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.  உரிய சேதாரங்களை  மதிப்பிட்டு காப்பீட்டு நிறுவனங்களிடம் தொகையை பெற்று மத்திய அரசு, மாநில அரசுகள் வழியாக இழப்பீட்டுத் தொகையைபாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்குகிறது.