Tag: ஜி20 மாநாடு: நிதி கட்டமைப்பு செயற்குழு சென்னையில் இன்று   தொடக்கம்

தமிழ்நாடு

ஜி20 மாநாடு: நிதி கட்டமைப்பு செயற்குழு சென்னையில் இன்று   தொடக்கம்       ஜி20 மாநாடு இந்தியாவில் நடைபெறவுள்ள நிலையில், நிதித் துறை கட்டமைப்பு செயற்குழுக் கூட்டம் சென்னையில்  தொடங்கவுள்ளது. நிகழாண்டு ஜி20 மாநாடு, இந்தியா தலைமையில் தில்லியில் வரும் செப்.9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.  இதையொட்டி, நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் ஆயத்தக்  கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இதில் உறுப்பினர்களாக உள்ள வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர். இந்தக் கூட்டத்தில் விலைவாசி உயர்வு, எரிசக்தி சார்ந்த பொருள்கள் பற்றாக்குறை, தட்பவெட்பநிலை, பருவநிலை மாற்றம் மூலம் வரக்கூடிய பொருளாதார தாக்கம் குறித்து ஆலோசனை செய்யப்படவுள்ளது. விரைவில் ஆசியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப மையமாக தமிழகம் மாறும் ஆசியாவிலேயே மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப மையமாக தமிழகம் விரைவில் மாறும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின்  தெரிவித்தார். இது சம்பந்தமாக முக்கியமான புள்ளிகள்: இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில் மாநிலம் 10%க்கும் மேல் பங்களிக்கிறது. சென்னை, கோயம்புத்தூர் மற்றும் ஓசூரில் தமிழ்நாடு தொழில்நுட்ப நகரத்தை (TN Tech City) மாநில அரசு நிறுவ உள்ளது. சென்னை ஐடி காரிடாரில் 150 ஏக்கரில் ஒரு டெக் சிட்டியும், ஓசூரில் 500 ஏக்கரில் இரண்டாவதும், கோவையில் மூன்றாவது டெக் சிட்டியும் வருகிறது.  உலகளாவிய நிறுவனங்கள் தங்கள் திறன் மையங்களை அமைக்க விரும்பும் சிறந்த இடமாக சென்னை தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.  சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் Umagine Chennai 2023 மார்ச் 25 அன்று நிறைவடைகிறது.