Tag: ஜம்மு-காஷ்மீரில் சர்வதேச எல்லைப் பகுதியில் நாட்டின் முதல் தபால் நிலையம்

தினசரி தேசிய நிகழ்வுகள்

ஜம்மு-காஷ்மீரில் சர்வதேச எல்லைப் பகுதியில் நாட்டின் முதல் தபால் நிலையம் ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் கிஷண்கங்கா ஆற்றங்கரையில் அமைந்துள்ள அஞ்சலக குறியீடு எண் 193224 கொண்ட கேரான் தபால் நிலையத்துக்கு நாட்டின் முதல் தபால் நிலையம் என்ற அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் கடைசி தபால் நிலையம் என்றழைக்கப்பட்டு வந்த இந்த தபால் நிலையம், எல்லைக் கட்டுப்பாட்டு கோடுக்கு மிக அருகில் அமைந்திருப்பதால் இந்தப் புதிய அங்கீகாரத்தை இந்திய ராணுவம் வழங்கியுள்ளது. “கேரளம்“ எனப் பெயர் மாற்ற தீர்மானம் கேரளத்தின் பெயரைக் ”கேரளம்” என அதிகாரப்பூர்வமாக மாற்ற நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கும் தீர்மானம் அந்த மாநில சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அரசமைப்பின் முதல் அட்டவணையில் மாநிலத்தின் பெயர் 'கேரளா' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் 3- ஆவது பிரிவின் கீழ் மாநிலத்தின் பெயரைக் கேரளம் என்று திருத்தம் செய்து அரசமைப்பின் 8- ஆவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து மொழிகளிலும் 'கேரளம்' என்று பெயர் மாற்றம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை கோரும் இந்தத் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றியது.