Tag: சென்னை போலீஸாருக்கு கையடக்க கணினி (Tablets)

அரசியல்

அரசு நலத்திட்டங்கள் சென்னை காலநிலை செயல்திட்ட கையேடு வெளியீடு  2050-ஆம் ஆண்டுக்குள் சென்னையில் கார்பன் சமன்பாட்டை எட்டவகை செய்யும் காலநிலை செயல்திட்ட கையேட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்த செயல் திட்டத்தின்படி, கார்பன் உமிழ்வை 2050-ஆம் ஆண்டில் பூஜ்ஜிய நிலையை அடைய வழி செய்யப்பட்டுள்ளது.  2050-ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தில் இருந்து 93 சதவீத மின்சாரத்தை அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அனைத்து வணிகக் கட்டடங்களிலும் அதிக திறன் கொண்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றலை பயன்படுத்துவது, மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை 100 சதவீதம் மின்மயமாக்குவது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளை ஊக்குவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பு 2021 COP-26 இல், இந்தியா 2070 க்குள் நிகர பூஜ்ஜிய பசுமை இல்ல வாயு உமிழ்வை அடைவதற்கான லட்சிய இலக்கை அறிவித்தது. சான்றிதழ்கள் பாதுகாப்புக்கு இ-பெட்டகம் கைப்பேசி செயலி  கல்விச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல்களை பொது மக்கள் பாதுகாப்பாக பகிர்வதற்கான இ-பெட்டகம் கைப்பேசி செயலி சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த செயலியை தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார். சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்ஆளுமை முகமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், புதிய செயலியின் சேவை தொடங்கப்பட்டது. இணைய சேவை மையம் அளிக்கும் சான்றிதழ்கள், கல்விச் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்கள், உரிமங்கள், நிலப் பரிவர்த்தனை ஆவணங்கள் மற்றும் தரவுகளைப் பாதுகாக்க நம்பிக்கை இணையம் (Blockchain Technology) வழி செய்திடும். சான்றிதழ்களை சேதப்படுத்தாமல் பாதுகாக்க அரசாங்கத்துக்கு இந்த நம்பிக்கை இணையம் உதவி புரியும்.  இந்தச் சேவையால், மக்கள் தங்களது டிஜிட்டல் ஆவணங்களை வேலை வாய்ப்பு, உயர் கல்வி நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் பிற அலுவலர்களின் சரிபார்ப்புக்காக பாதுகாப்பான மற்றும் காகிதமில்லாத முறையில் பகிர முடியம்.  முதல் கட்டம்: புதிய சேவையின் முதல் கட்டமாக ஜாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், முதல் பட்டதாரிச் சான்றிதழ் உட்பட 24 வகையான சான்றிதழ்களை இ-பெட்டகம் கைப்பேசி செயலி பாதுகாக்கும். இந்தச் செயலி மூலம் மின்னஞ்சல், குறுஞ்செய்தி அல்லது பிற வழிகளில் ஆவணங்களைப் பாதுகாப்பாக பகிர விருப்பான வழியை குடிமக்களே தேர்வு செய்யலாம். சென்னை போலீஸாருக்கு கையடக்க கணினி (Tablets) காவல் ரோந்துப்பணியை நவீனப்படுத்தும் திட்டமாக மின்னணு ரோந்து முறையை செயல்படுத்தும் “ஸ்மார்ட் காவலர்” எனும் திட்டத்தை தொடங்கிவைத்து கையடக்கக் கணினிகளை வழங்கிய சென்னை பெருநகரக் காவல் ஆணையர் சங்கர் ஜிவால். இந்த கணினியில் “ஸ்மார்ட் காவலர் செயலி” (Smart Kaavalar App) மூலம் ரோந்து பணிகளின் போது, காவலர் பணியில் இருக்குமிடம் முக அடையாளத்தை வைத்து குற்றவாளிகளை அடையாளம் காண உதவும் செயலி (Face Recognition App) ஆகியவை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.