Tag: சூடான் நெருக்கடி 2023

தினசரி தேசிய நிகழ்வுகள்

’இந்தியாவின் முதல் வாட்டர் மெட்ரோ ரயில்’ இந்தியாவின் முதல் வாட்டர் மெட்ரோ ரயில் கேரள மாநிலம் கொச்சியில் தொடங்கப்பட உள்ளது. கேரளாவின் கொச்சியில் முதல் வாட்டர் மெட்ரோவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் தயாரித்துள்ள இந்த மெட்ரோ திட்டம் எட்டு மின்சார கலப்பின படகுகளுடன் தொடங்கும். இந்த கனவு திட்டத்திற்கு கேரள அரசு மற்றம் ஜெர்மன் நிறுவனமான கே.எஃப்டபிள்யூ (KfW) நிதியுதவி செய்கின்றன. கொச்சி வாட்டர் மெட்ரோ திட்டத்தின் மொத்த செலவு ரூ.1,137 கோடி ஆகும். சூடான் நெருக்கடி 2023 சூடானின் பல்வேறு பகுதிகளில் ராணுவத்துக்கும் துணை ராணுவப் படையினருக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வரும் நிலையில், அங்கு தங்கியுள்ள வெளிநாட்டினரை வெளியேற்றுவதற்கான ஆயத்தப் பணிகளை இந்தியாவும் பிற நாடுகளும் தொடங்கியுள்ளன. ’ஆபரேஷன் காவேரி’ சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்கு ’ஆபரேஷன் காவேரி’ திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. சூடானின் தேசிய தலைநகர் கார்டூம் மற்றும் டார்பர் போன்ற தொலைதூர மாகாணங்கள் உட்பட பல்வேறு பகுதிகளில் கிட்டத்தட்ட 3,000 இந்தியர்கள் சிக்கியுள்ளனர். சூடானில் சிக்கித் தவிக்கும் நமது குடிமக்களை மீட்க ஆபரேஷன் காவேரி நடந்து வருகிறது.  சுமார் 500 இந்தியர்கள் போர்ட் சூடான் வந்தடைந்துள்ளனர். சூடான் நெருக்கடி அதன் அண்டை நாடுகள் மற்றும் பிற நாடுகளிடையே எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது.  இது பகிரப்பட்ட நைல் மற்றும் எண்ணெய் குழாய்கள் பற்றிய கவலைகள் முதல் எதிர்கால அரசாங்கத்தின் உருவாக்கம் மற்றும் ஒரு புதிய மனிதாபிமான பேரழிவுக்கான சாத்தியம் பற்றிய கவலைகள் வரை உள்ளது. கேசவானந்த பாரதி வழக்குக்காக உச்ச நீதிமன்றம் ஒரு சிறப்பு வலைப்பக்கத்தை உருவாக்கியுள்ளது. இந்திய அரசியலமைப்பின் ’அடிப்படை கட்டமைப்பு’ குறித்து ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கிய கேசவானந்த பாரதி வழக்கில் வாதங்கள், எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்புகள் மற்றும் தீர்ப்பு ஆகியவற்றின் விவரங்கள் அடங்கிய சிறப்ப வலைப்பக்கத்தை இந்திய உச்ச நீதிமன்றம் அர்ப்பணித்துள்ளது. கேசவானந்தா வழக்கு தொடர்பான அனைத்து எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்புகள் மற்றும் அனைத்தையும் அனைத்து உலக ஆராய்ச்சியாளர்களும் பார்க்க ஒரு வலைப்பக்கத்தை நாங்கள் அர்ப்பணித்துள்ளோம் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கூறினார். 50 ஆண்டுகளுக்கு முன்பு 1973-ஆம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி இதே நாளில் தீர்ப்பு வழங்கப்பட்டது. கேசவானந்த பாரதி வழக்கு ஏப்ரல் 24, 2023 அன்று அதன் 50 வது ஆண்டு நிறைவை எட்டியது. கேசவானந்த பாரதி வழக்கின் முக்கியத்துவம்: இந்த தீர்ப்பு இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்க அடுத்தபடியாக இரண்டாவது மிக முக்கியமான நூல் என்று கூறப்படுகிறது. இந்த வழக்கை விசாரிக்க 13 நீதிபதிகள் கொண்ட அமர்வை உச்ச நீதிமன்றம் அமைத்தது. கேசவானந்த பாரதி வழக்கில், மத சொத்துக்களை நிர்வகிப்பதில் கட்டுப்பாடுகளை விதித்த இரண்டு மாநில நில சீர்திருத்த சட்டங்கள் (9வது அட்டவணையின் கீழ்) தொடர்பாக கேரள அரசுக்கு எதிராக நிவாரணம் கோரப்பட்டது. அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை அல்லது அத்தியாவசிய அம்சங்களை மாற்றாத வரை அல்லது திருத்தாத…