Tag: சுகாதாரத் துறையில் குறையும் வெளிநாட்டு சார்புத்தன்மை

அரசியல் அறிவியல்

சுகாதாரத் துறையில் குறையும் வெளிநாட்டு சார்புத்தன்மை “ஒரே பூமி, ஒரே சுகாதாரம், என்ற கொள்கையை முன்னெடுத்து இந்தியா செயல்பட்டு வருகிறது. ஆயுஷ்மான் பாரத் சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாக மருத்துவ சிகிச்சையை மலிவானதாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.  அத்திட்டத்தின் வாயிலாக ஏழை நோயாளிகளின் சுமார் ரூ. 80,000 கோடி சேமிக்கப்பட்டுள்ளது.  நாடு முழுவதும் உள்ள 9,000 மக்கள் மருந்தகங்கள் வாயிலாக மருந்துகள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.  அந்த மருந்தகங்கள் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் சுமார் ரூ. 20,000 கோடியை சேமித்துள்ளது. இ-சஞ்சீவனி வசதி மூலமாக 10கோடிக்கும் அதிகமானோர் தொலைநிலை மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றனர்.  5ஜி தொழில்நுட்பமும்,ட்ரோன் வசதிகளும் சுகாதாரத் துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தி வருகின்றன. மருத்துவத் துறையில் ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்கு நாடு முழுவதும் பல்வேறு ஆய்வகங்களை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) அமைத்துள்ளது.  துாய்மை இந்தியா, உஜ்வாலா, ஜல்ஜீவன், போஷண் உள்ளிட்ட பல்வேறு சுகாதாரம் சார்ந்த திட்டங்களையும் அரசு செயல்படுத்தி வருகிறது.  அந்தத் திட்டங்கள் வாயிலாகப் பல்வேறு நோய்கள் பரவல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.