Tag: சிவிங்கி புலிகள் அறிமுக திட்டம்

புவியியல்

சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் ம.பி. குனோ பூங்காவில் 2 சிவிங்கிப் புலி குட்டிகள் இறப்பு இந்தியாவில் அழிந்துபோன இனமான சிவிங்கிப்புலிகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டத்தின்கீழ் தென்னாப்பிரிக்கா மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் இருந்து 2 கட்டங்களாக 20 சிவிங்கிப் புலிகள் கொண்டுவரப்பட்டன. மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் அவை பராமரிக்கப்பட்டு வரும் நிலையில், 2 பெண் சிவிங்கிப் புலிகளும் ஒரு ஆண் சிவிங்கிப் புலியும் அடுத்தடுத்து உயிரிழந்தன. சிவிங்கி புலிகள் அறிமுக திட்டம்     ஆப்பிரிக்காவில் உள்ள நம்பியா நாடும் இந்தியாவும் சிறுத்தைகளை இந்தியாவிற்கு அழைத்து வருவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெடுத்திட்டுள்ளன. நிலப்பரப்பில் அதி வேகம் ஓடக் கூடிய திறன் பெற்ற சிறுத்தைகள் ஏற்கனவே இந்தியாவில் இருந்துள்ளது. வேட்டையாடப்பட்டது உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவில் சிறுத்தை இனத்தின் எண்ணிக்கை குறைந்தபோனது. தென் ஆப்பிரிக்காவில் வாழும் சிறுத்தைகளை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. அதோடு மட்டுமல்லாமல், சிறுத்தை திட்டத்தை செயல்படுத்த தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு (National Tiger Conservation Authority (NTCA) வழிகாட்டும் நோக்கில் 3 பேர் கொண்ட கழுவையும் உச்சநீதிமன்றம் அமைத்தது. “மறு அறிமுகம்” என்பது, ஒரு இனத்தின் அது உயிர் பிழைக்க திறன் கொண்ட பகுதியில் அதை விடுவிப்பதாகும். புராஜெகட் டைகர், காடுகளுக்கும் அவற்றைப் பாதுகாப்புக்கும் உதவியது போல சிறுத்தையின் பாதுகாப்பு புல்வெளிகள் மற்றும் வாழ்விடங்களை புதுப்பிக்கும். மேலும், சிறுத்தையின் எண்கள் உயரும்.