Tag: சியாச்சினில் முதல் பெண் ராணுவ அதிகாரி

தினசரி தேசிய நிகழ்வு

அறிவியல் வளர்ச்சியின் இலக்கு தற்சார்பு இந்தியா மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் 108-ஆவது இந்திய அறிவியல் மாநாட்டை காணொலி முறையில் பிரதமர் தொடக்கி வைத்தார். பின்னர் உரையாற்றிய அவர், அடுத்த 25 ஆண்டுகளுக்கான நாட்டின் அறிவியல் தொலைநோக்குப் பார்வை குறித்து பேசினார். புத்தாக்க குறியீட்டில் முன்னேற்றம்: உலக புத்தாக்க குறியீட்டில் கடந்த 2015-இல் 81-ஆவது இடத்தில் இருந்த இந்தியா,2022-இல் 40-ஆவது இடத்துக்கு முன்னேறியது. “பெண்களுக்கு அதிகாரமளிப்பதுடன் கூடிய நிலையான வளர்ச்சிக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்கள்“ என்ற கருப்பொருளில் நடைபெறுவது மகிழ்ச்சியளிக்கிறது. புதிய தடுப்பூசிகள் குறித்த ஆய்வுகள்: புதிய தொற்றுநோய்களை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் உருவாக்கத்தில் அறிவியல் சமூகத்தின் பங்களிப்பு முக்கியமானதாகும்.  உலக மக்கள்தொகையில் 17 முதல் 18 சதவீதத்தை இந்தியா கொண்டுள்ளது. எனவே, இந்திய மக்களின் வளர்ச்சி என்பது உலக வளர்ச்சிக்கும் வழிவகுக்கும். 2023-ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐ.நா. அறிவித்திருப்பது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமைக்குரிய விஷயமாகும்.  ஆதார் முகவரி புதுப்பித்தலுக்கு ‘குடும்பத் தலைவர்’ முறை அறிமுகம் 'ஆதார்' அடையாள அட்டையை வழங்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) ‘குடும்பத் தலைவர்’ என்கிற முறையை ஏற்படுத்தியுள்ளது; இதன்மூலம் குடும்ப உறுப்பினர்களை ஒருங்கிணைத்து முகவரி உள்ளிட்ட வசதிகளை செய்துள்ளதாக மத்திய மின்னணு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆதாரில் ஏற்கெனவே இருப்பிடச் சான்று ஆவண வசதி செய்யப்பட்டுள்ளது. தற்போது குடும்பத் தலைவர் (ஹெச்ஓஎஃப்-ஹெட் ஆஃப் தி பேஃமிலி) முறை கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி, 18 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு நபரும் குடும்பத் தலைவராக பதிவு செய்து கொள்ளலாம். ஹெச்ஓஎஃப் தனது முகவரியை மற்ற குடும்ப உறுப்பினர்களான மனைவி, தந்தை, தாய், மகன்கள்/மகள்கள், உடன் பிறந்தவர்களோடு பகிர்ந்துகொள்ளலாம். ஒருவர் முகவரியை முகவரியை மாற்றும் (https://myaadhaar.uidai.gov.in/) என்ற தளத்தில் இந்த முறையைப் பயன்படுத்தலாம். இதற்கு குடும்பத் தலைவரின் ஆதார் எண்ணைப் பதிவு செய்து சரிபார்த்தல் நடைமுறையைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். பின்பு, ஹெச்ஓஎஃப்வுடன் உறவுமுறை ஆவணச்சான்றை பதிவேற்றம் செய்ய வேண்டும். அதாவது விண்ணப்பதாரருக்கும், குடும்பத் தலைவருக்கும் இடையேயான உறவை குறிப்பிட்டு, அவர்களது பெயர்கள், குடும்ப அட்டை, தேர்வு மதிப்பெண் சான்றிதழ், திருமணச் சான்றிதழ், கடவுச்சீட்டு போன்ற ஆவணங்களை ஆதாரமாகச் சமர்ப்பித்து குடும்பத் தலைவரோடு இணைக்கலாம். இந்தச் சேவையைப் பயன்படுத்துவதற்கான கட்டணம் ரூ.50. இந்ததக் கட்டணம் செலுத்தப்பட்ட பிறகு குடும்பத் தலைவருக்கு இதுகுறித்த குறுஞ்செய்தி அனுப்பப்படும். தகவல் அனுப்பப்பட்ட நாளிலிருந்து 30 நாள்களுக்குள் மேல் குறிப்பிட்ட இணையதளத்தில் குடும்பத்தலைவர் தமது ஒப்புதலைத் தெரிவிக்க வேண்டும். 30 நாள்களுக்குள் குடும்ப உறுப்பினரின் கோரிக்கையை குடும்பத் தலைவர் நிராகரித்தாலோ அல்லது தமது முகவரியைப் பகிர்ந்துகொள்ள விருப்பம் தெரிவிக்காவிட்டாலோ சம்பந்தப்பட்ட விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படாது. இது சம்பந்தமான தகவல், விண்ணப்பித்தவருக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும். எந்தச் சூழ்நிலையிலும் செலுத்திய கட்டணம் திருப்பித் தரப்பட மாட்டாது. வடகிழக்கு கலைஞர்களின் கலாசார விழா தொடக்கம்  தென்மண்டல கலாசார மையத்தின் ஆக்டேவ் 2023-வடகிழக்கின் கலாசார திருவிழாவை தமிழக ஆளுநரும், அம்மையத்தின் தலைவருமான…