Tag: சரக்குக் கப்பல்களைத் தாக்க ரஷியா ஆயத்தம்

சர்வதேச நிகழ்வு

சரக்குக் கப்பல்களைத் தாக்க ரஷியா ஆயத்தம் தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்கேய் ஷாய்குவும் உக்ரைன் உள்கட்டமைப்புத் துறை அமைச்சர் ஒலெக்ஸாண்டர் குப்ரகோவும் கையொப்பமிட்டனர். துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற அதற்கான நிகழ்ச்சியில் ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸும் துருக்கி அதிபர் எர்டோகனும் கலந்துகொண்டனர். அந்த ஒப்பந்தத்தின் கீழ், உக்ரைன் துறைமுகங்களில் உணவு தானியங்கள் கப்பலில் ஏற்றப்படுவதை துருக்கி, உக்ரைன், ஐ.நா. அதிகாரிகள் மேற்பார்வையிடுவதற்கும், கருங்கடலைக் கடந்து துருக்கியின் பாஸ்பரஸ் நீரிணை வழியாக செல்லும் தானியக் கப்பல்களை ஐ.நா., ரஷியா, உக்ரைன், துருக்கி அதிகாரிகள் அடங்கிய கூட்டுக் குழு கண்காணிப்பதற்கும் ஒப்புக்கொள்ளப்பட்டது. மேலும், ஒப்பந்த காலம் முழுவதும் துறைமுகங்கள் மீதோ, சரக்குக் கப்பல்கள் மீதோ தாக்குதல் நடத்தாமல் இருக்க ரஷியாவும் உக்ரைனும் சம்மதித்தன. அந்த ஒப்பந்தம் கையொப்பமானபோது, தங்கள் நாட்டின் வேளாண் பொருள்களை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படும் என்று ஐ.நா. உறுதியளித்திருந்ததாகக் கூறப்படுகிறது. எனினும், அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாததால் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ரஷியா கூறியது. அதன் தொடர்ச்சியாக, உக்ரைன் தானியங்களை ஏற்றுமதி செய்யவதற்குப் பயன்படுத்தப்படும் ஒடெஸா துறைமுகம் மற்றும் அதன் தானியக் கிடங்குகள் உள்ளிட்ட கட்டமைப்புகள் மீது ரஷியா 4 நாள்களாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், உக்ரைனுக்கு வரும் சரக்குக் கப்பல்களைத் தாக்குவதற்கான போர் ஒத்திகையை தாங்கள் வெற்றிகரமாக மேற்கொண்டதாக ரஷியா தற்போது அறிவித்துள்ளது. ரஷ்யா பற்றி அதிபர் - விளாடிமிர் புடின் தலைநகரம் - மாஸ்கோ நாணயம் - ரஷ்ய ரூபிள்