சம்விதான் ஹத்யா திவாஸ் 'சம்விதான் ஹத்யா திவாஸ்' (இதன் பொருள் 'அரசியலமைப்பு படுகொலை தினம்') என்பது இந்தியாவில் ஆண்டுதோறும் ஜூன் 25 அன்று அனுசரிக்கப்படும் ஒரு நாளாகும். இந்திய அரசாங்கத்தால் நிறுவப்பட்ட இந்நாள், 1975-ஆம் ஆண்டு ஜூன் 25 அன்று அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் நாடு தழுவிய அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டதை நினைவுகூருவதோடு, அதனால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான குடிமக்களையும் கௌரவிக்கிறது. கடல்சார் பணியாளர் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25 அன்று கடைபிடிக்கப்படும் 'கடல்சார் பணியாளர் தினம்', ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரப்பூர்வமான ஒரு சிறப்பு நாளாகும். 2026-ஆம் ஆண்டிற்கான கடல்சார் பணியாளர் தினத்தின் கருப்பொருள் "Carrying world trade. Carrying the risks" என்பதாகும். உலக வெண்குஷ்டி விழிப்புணர்வு நாள் 2026 வெண்குஷ்டி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கவும் 2026-ஆம் ஆண்டு ஜூன் 25 அன்று உலகம் முழுவதும் 'உலக வெண்குஷ்டி விழிப்புணர்வு நாள்' கடைப்பிடிக்கப்பட்டது. 2026-ஆம் ஆண்டிற்கான உலக வெண்குஷ்டி விழிப்புணர்வு நாளின் உலகளாவிய கருப்பொருள் From Stigma to Strength என்பதாகும்.

