Tag: காசநோய் (TB) பற்றி

தேசிய – நிகழ்வுகளின் நாட்குறிப்பு

”மனதின் குரல்” வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி  மாதத்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் ”மனதின் குரல்” வானொலி நிகழ்ச்சி வாயிலாக பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். நடப்பு ஜுன் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் பிரதமர் மோடி அமெரிக்கவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். அதன் காரணமாக ஒரு வாரம் முன்னதாகவே மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். காசநோய் இல்லா இந்தியா: 2025-ஆம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காசநோயாளிகளைத் தத்தெடுக்கும் ”நிக்ஷய் மித்ரா” திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. திட்டத்தின் மூலமாக நாடு முழுவதும் 10 லட்சத்துக்கும் அதிகமான காசநோயாளிகள் தத்தெடுக்கப்பட்டுள்ளனர். காசநோய் (TB) பற்றி காசநோய் (TB) மைகோபாக்டீரியம் டுபர்குளோசிஸ் (Mycobacterium tuberculosis) என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது.  பாக்டீரியா பொதுவாக நுரையீரலைத் தாக்கும். கூடவே சிறுநீரகம், முதுகெலும்பு மற்றும் மூளை போன்ற உடலின் எந்தப் பகுதியையும் தாக்கும். குறிப்பு: உலக சுகாதார அமைப்பின் (WHO) மதிப்பீட்டின்படி 2020 ஆம் ஆண்டில், இந்தியா உலகின் மிகப்பெரிய காசநோய் தொற்றுநோயைக் கொண்டுள்ளது. இது உலகெங்கிலும் உள்ள காசநோய் தொற்று பதிவுகளில் 26% ஆகும். புதிய வெண்மைப் புரட்சி: பாரமுல்லா பகுதியில் வேளாண்மை பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், அங்கு பாலுக்குத் தட்டுப்பாடு காணப்பட்டது. அங்கு வாழும் மக்கள் அந்தத் சவாலை வாய்ப்பாக மாற்றிக் காட்டியுள்ளனர். அங்கு வாழும் பலர் கால் நடை வளர்ப்பை மேற்கொள்ளத் தொடங்கினர். அதன் காரணமாக, புதிய வெண்மைப் புரட்சியின் மையமாக பாரமுல்லா மாறி வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் அங்கு 500-க்கும் அதிகமான பால் உற்பத்தி மையங்கள் தொடங்கப் பட்டுள்ளன.