Tag: கடல் பாலத்துக்கு வாஜ்பாய் பெயர்

வரலாறு

முக்கிய தினங்கள் தேசிய புள்ளியியல் தினம் – ஜூன் 29 இந்த நாள் புள்ளியியல் மற்றும் பொருளாதார திட்டமிடல் துறையில் மறைந்த பேராசிரியர் பிரசண்டா சந்திர மஹலனோபிஸின் பணி மற்றும் பங்களிப்பை கௌவுரவிக்கிறது. 2023-கான கருப்பொருள் நிலையான வளர்ச்சி இலக்குகளை கண்காணிப்பதற்கான தேசிய குறியீடுகள் கட்டமைப்புடன் மாநில குறியீடுகள் கட்டமைப்பை சீரமைத்தல். பி சி மஹலனோபிஸ் பற்றி இவர் 'இந்திய புள்ளியியலின் தந்தை' என்று அழைக்கப்படுகிறார். இரண்டாவது (1956-1961) திட்டக் கமிஷன் மஹாலனோபிஸ் திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்திய புள்ளியியல் நிறுவனம் (ISI), பி.சி. மஹலனோபிஸால் 1931 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதி நிறுவப்பட்டது. 1959 இல் இந்திய நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் இந்த நிறுவனம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம் என்ற அந்தஸ்தைப் பெற்றது. ISI-யின் தலைமையகம் - கொல்கத்தா. முக்கிய இடங்கள் பற்றிய செய்திகள் கடல் பாலத்துக்கு வாஜ்பாய் பெயர் மகாராஷ்டிரத்தில் வர்சோவா, பாந்த்ரா பகுதிகளை இணைக்கும் வகையில், 17 கி.மீ. நீள கடல் பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதேபோல மும்பை மற்றும் நவி மும்பையை இணைக்கும் வகையில், 21.8.கி.மீ. நீள மும்பை ட்ரான்ஸ் துறைமுக பாலம் கட்டப்பட்டு வருகிறது. மகாராஷ்டிர அமைச்சரவைக் கூட்டத்தில் வர்சோவா பாந்த்ரா கடல் பாலத்துக்கு ஹிந்துத்துவ சித்தாந்தவாதி சாவர்க்கரின் பெயரையும், மும்பை ட்ரான்ஸ் துறைமுக பாலத்துக்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயரையும் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. ட்ரான்ஸ் பாலம் பற்றி மும்பை டிரான்ஸ் ஹார்பர் இணைப்பு (MTHL) ஒரு பொறியியல் அற்புதம். இது மும்பையை பிரதான நிலப்பகுதியுடன் இணைக்கிறது. இது மும்பையில் உள்ள செவ்ரியில் இருந்து தொடங்கி நவியின் சிர்லே வரை விரிகிறது. 22 கிமீ நீளமுள்ள கடல் இணைப்பு நாட்டிலேயே மிக நீளமானது மற்றும் உலகின் பத்தாவது நீளமான கடல் பாலம் ஆகும்.