Tag: கங்கா விலாஸ் கப்பலின் முதல் பயணம் திப்ருகரில் நிறைவு

தினசரி தேசிய நிகழ்வு

மாநில அமைச்சரவை: உச்சநீதிமன்றம் கருத்து மோதல் போக்கு: முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வரும் பஞ்சாபில், பல்வேறு விவகாரங்களில் மாநில அரசுக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனிடையே, சிங்கப்பூரில் அண்மையில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்பதற்காக பஞ்சாபில் 36 அரசுப் பள்ளிகளின் முதல்வர்கள் தேர்வு செய்யப்பட்ட நடைமுறை குறித்து விளக்கமளிக்குமாறு முதல்வரை ஆளுநர் அறிவுறுத்தியிருந்தார். அதற்கு பதில் கடிதம் எழுதிய முதல்வர், 'நான் 3 கோடி பஞ்சாப் மக்களுக்குதான் பதிலளிக்க வேண்டும்; மத்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநருக்கு அல்ல' என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடரை  நடத்த முடிவு செய்து மாநில அமைச்சரவை, இதுதொடர்பான பரிந்துரையை ஆளுநருக்கு அனுப்பியது. ஆனால், முதல்வரின் முந்தைய கடிதம் மீது சட்ட ஆலோசனைகள் பெற்ற பிறகே பட்ஜெட் கூட்டத் தொடருக்கு அழைப்பு விடுப்பது குறித்து முடிவெடுப்பேன் என்று ஆளுநர் தெரிவித்தார். கவர்னர் மற்றும் மாநில அரசு ‘ஆளுநர் கோரும் விவரங்களை அளிக்க வேண்டியது மாநில அரசின் கடமை. மாநில அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்க ஆளுநர் கடமை. அச்சட்டத்தை புறக்கணிக்கும் வகையில் மாநில அரசு சட்ட ஆலோசனைதான் கோரியுள்ளார். அவரது தரப்பில் கவர்னர். கங்கா விலாஸ் கப்பலின் முதல் பயணம் திப்ருகரில் நிறைவு இந்தக் கப்பல் தனது முதல் பயணத்தை கடந்த ஜனவரி மாதம் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் தொடங்கியது. இந்த சொகுசு கப்பலின் போக்குவரத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.  இது புத்தகயா, விக்ரம் ஷிலா, சுந்தரவனக்காடுகள், காஜிரங்கா தேசியப்பூங்கா, வங்கதேசத்தின்  டாக்கா வழியாக அசாமில் உள்ள திப்ருகரில் பயணத்தை முடிக்கும் வகையில் தொடங்கி வைக்கப்பட்டது. 3,200, கிலோமீட்டர் தூரம் பயணம் மேற்கொண்டு உலகின் மிக நீளமான நதிவழிக் கப்பல் என்ற பெயரை இந்தக் கப்பல் பெற்றுள்ளது. இதில் பயணம் செய்ய அடுத்த 2 ஆண்டுகளுக்கு முன்பதிவு செய்து முடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தக் கப்பலில் பயணிக்க ஒரு நாளைக்கு ஒரு பயணிக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஒரு பயணி இந்தக் கப்பலில் 40 நாள் பயணம் செய்ய சுமார் ரூ.20 லட்சம் வரை செலவாகும்.