Tag: ஓய்வுபெற்ற நீதிபதி எம்.சத்தியநாராயணன் குழு

தமிழ்நாடு நிகழ்வுகள்

கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகள் IIT,IIM கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்டால் அவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ 50000  வழங்கப்படும் பயனாளிகளின் எண்ணிக்கையில் உச்சவரம்பு இல்லை என்றாலும், ஆரம்பத்தில் மொத்தம் 35 மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைவார்கள். புற்றுநோய், ஆஸ்துமா, சிறுநீரக செயலிழப்பு மற்றும் சிலிகோசிஸ் போன்ற நோய்களுக்கு சிகிச்சை பெற்று வரும் TNCWWB இன் உறுப்பினர்களுக்கு, அவர்களால் வேலை செய்ய முடியாத நிலையில், ஆண்டுக்கு ₹12,000 உதவி வழங்கப்படும், இது இரண்டு தவணைகளில் வழங்கப்படும். இத்திட்டம் முதற்கட்டமாக மூன்று ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும். ஓய்வுபெற்ற நீதிபதி எம்.சத்தியநாராயணன் குழு புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பகுதியில் உள்ள தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு தண்ணீர் வழங்கும் மேல்நிலை தொட்டியில் இருந்துமனித மலம் கலந்த  சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி எம். சத்தியநாராயணனை ஒரு நபர் கமிஷனாக சென்னை உயர்நீதிமன்றம் நியமித்தது. நிர்பயா நிதி நிர்பயா நிதியின் கீழ் பாதுகாப்பான நகரத் திட்டத்தின் ஒரு பகுதியாக,  பெருநகரப் போக்குவரத்துக் கழகத்தின் (எம்டிசி) 2,500 பேருந்துகளில் ₹72.71 கோடி செலவில்  கேமராக்கள் பொருத்தப்பட்டன. நிர்பயா நிதி பற்றி: 2013 யூனியன் பட்ஜெட்டில் ரூ.1,000 கோடி நிர்பயா நிதி அறிவிக்கப்பட்டது. பெண்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை நிலைநிறுத்துவதற்காக இந்நிதி  பயன்படுத்தப்பட வேண்டும். இந்த நிதியின் கட்டமைப்பு, நோக்கம் மற்றும் பயன்பாடு பற்றிய விவரங்களைத் தயாரிக்க, சம்பந்தப்பட்ட பல அமைச்சகங்களோடு , பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் இணைந்து பணியாற்றும் . நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையால் இந்த நிதி நிர்வகிக்கப்படுகிறது. இ-வாகன சேவை 2021-22ல் பதிவு செய்யப்பட்ட 39,617 பேட்டரியில் இயங்கும் வாகனங்களுடன் ஒப்பிடுகையில், 2022-23 (பிப்ரவரி வரை) 59,951 போக்குவரத்து அல்லாத வாகனங்கள் (தனிப்பட்ட பயன்பாடு) உட்பட மொத்தம் 62,482 பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகனங்கள் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மோட்டார் வாகன வரியிலிருந்து இ-வாகனங்களுக்கான 100% விலக்கை டிசம்பர் 2025 வரை மாநில அரசு நீட்டித்துள்ளது. சமீபத்தில் அரசு இ - வாகனக் கொள்கை 2023 யை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது