Tag: ஒடிஸாவில் 142 இடங்களில் காட்டுத் தீ: நாட்டிலேயே மிக அதிகம்

தினசரி தேசிய நிகழ்வு

முற்றிலும் சூரிய மின்சக்தியை பயன்படுத்தும் ஒடிஸா கிராமம்! ஒடிஸா மாநிலத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் கந்தர்கார் மாவட்டத்தில் உள்ள தொலைதுார சிதாமமான சக சாஹி, தனது மின்சாரத் தேவைக்கு முழுவதுமாக சூரிய மின் சக்தியைப் பயன்படுத்தும் கிராமமாக மாறியுள்ளது. ஒடிஸாவில் 142 இடங்களில் காட்டுத் தீ: நாட்டிலேயே மிக அதிகம் நாட்டில் அதிகபட்சமாக ஒடிஸா மாநிலத்தின் 142 இடங்களில் காட்டுத்தீ சம்பவங்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்திய வன ஆய்வு நிறுவனம் (எஃப்எஸ்ஐ) வெளியிட்ட தகவலின்படி நாடு முழுவதிலும் உள்ள 391 இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. வனப் பகுதிகளில் மின்னல் தாக்குதல், வறண்ட மரங்கள் உரசிக்கொள்ளுதல் உள்ளிட்ட இயற்கை காரணங்களாலும், பற்றவைக்கப்பட்ட சிகரெட், பீடி, போன்றவற்றை வறண்ட இலைகள் காணப்படும் பகுதியில் எறிதல் போன்ற மனிதத் தவறுகளாலும் காட்டுத் தீ சம்பவங்கள் ஏற்படுகின்றன. மொத்தம் உள்ள 30 மாவட்டங்களில் 12 மாவட்டங்களில் காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன.  சிமிலிபால் தேசிய பூங்கா உள்ள மயூர்பஞ்ச் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான காட்டுத் தீ சம்பவங்கள் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.