Tag: உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-க்கான இலச்சினையை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு

உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-க்கான இலச்சினையை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின் உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கான இலச்சினையை சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வடிவமைப்பதில் தமிழ்நாடு முக்கியப் பங்காற்றும் விதமாக, 2030-ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்த இலக்கை நிர்ணயித்துள்ளது. இலச்சினை: முதல்வர் வெளியிட்ட இலச்சினை தமிழ்நாட்டின் முதல் எழுத்தான “த“ வை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், கணினிமயமாக்கல் மற்றும் தொழில்மயமாக்கம், நகரமயமாக்கப்பட்ட சமூகம் போன்ற கூறுகளில் வேகமாக முன்னேறுவதைத் தெரிவிக்கும் விதமாக “த“-வின் மேல்பகுதி அம்புக் குறியிட்டு உயர்த்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கான முக்கிய கருப்பொருள் : “மீள்திறனுடன் நீடித்து நிலைக்கத்தக்க மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி“. நாட்டில் முதல்முறையாக பெண் கைதிகள் இயக்கும் பெட்ரோல் நிலையம் இந்தியாவிலேயே முதல் முறையாக பெண் கைதிகள் மட்டும் இயக்கும் பெட்ரோல் விற்பனை நிலையம் சென்னை அருகே புழலில் திறக்கப்பட்டது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுடன் இணைந்து கடந்த 2018-ஆம் ஆண்டு கைதிகள் பெட்ரோல் விற்பனை நிலையத்தை சென்னை புழலில் சிறைத்துறை முதல் முறையாக திறந்தது. இதைத் தொடர்ந்து, வேலூர், கோயம்புத்தூர், பாளையங்கோட்டை, புதுக்கோட்டை சிறுவர் கூர்நோக்கு இல்லம் ஆகிய இடங்களில் சிறைத்துறை சார்பில் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டன. இந்த நிலையங்கள் தற்போது ஆண் கைதிகள் இயக்கி வருகின்றனர். ஒவ்வொரு பெட்ரோல் நிலையம் மூலமும் சுமார் 25 கைதிகள் வேலைவாய்ப்பு பெற்று வருகிறார்கள். பெட்ரோல் நிலையம் மூலம் சிறைத்துறைக்கு நல்ல வருவாய் கிடைப்பதோடு, கைதிகளும் சம்பாதித்து வருகின்றனர்.