Tag: உலக இரத்த தான தினம் -ஜுன் 14

வரலாறு

முக்கிய தினங்கள் உலக இரத்த தான தினம் -ஜுன் 14 இரத்த தானம் செய்வதன் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இரத்த தானம் செய்யும் தன்னார்வளர்களுக்கு நன்றி தெரிவிக்கவும் உலக இரத்த தான தினம் (WBDD) ஆண்டுதோறும் ஜுன் 14 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இரத்த தான தினத்தின் வருடாந்திர அனுசரிப்பு உலக சுகாதார அமைப்பு (WHO) தலைமையில் நடைபெறுகிறது. 2023-காண கருப்பொருள் – ”இரத்தம் கொடுங்கள், பிளாஸ்மா கொடுங்கள், வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ளுங்கள், அடிக்கடி பகிர்ந்து கொள்ளுங்கள்.” பின்னணி: ஆஸ்திரிய-அமெரிக்க நோயெதிர்ப்பு நிபுணரான கார்ல் லாண்ட்ஸ்டெய்னரின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் 2004 ஆம் ஆண்டிலிருந்து ஜுன் 14 ஆம் தேதியை உலக இரத்த தானம் செய்பவர்கள் தினமாக கடைப்பிடிக்க WHO தொடங்கியது. WHO பற்றி: தலைமை இயக்குநர் – டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயல் தலைமையகம் – ஜெனீவா, சுவிட்சர்லாந்து நிறுவப்பட்டது – 1948 உலக முதியோர் அவமதிப்பு விழிப்புணர்வு தினம் – ஜுன் 15 உலக முதியோர் அவமதிப்பு விழிப்புணர்வு நாள் ஆண்டுதோறும் ஜுன் 15-ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினம் முதியோர் அவமதிப்பு தடுப்புக்கான சர்வதேச வலையமைப்பின் (INPEA) வேண்டுகோளின்படி ஐக்கிய நாடுகள் பொது சபையால் (UNGA) ஜுன் 2006-ல் ஏற்றுகொள்ளப்பட்டது. 2023-ம் ஆண்டுக்கான கருப்பொருள்: ”வட்டத்தை நிறைவுசெய்தல்: பாலின அடிப்படையிலான வன்முறைக்கு முதியோர் கொள்கை, சட்டம் மற்றும் சான்றுகள் சார்ந்த பதில்கள்” UNGA பற்றி தலைவர் – ஹெச்.இ.சாபா கொரோசி தலைமையகம் – நியூயார்க், அமெரிக்கா நிறுவப்பட்டது – 1945 பாதுகாப்பு இந்திய கடற்படைக்கு இரண்டு போர்க்கப்பல்கள் அஞ்சாதீப், 3வது நீர்மூழ்கி எதிர்ப்பு போர்கப்பல் (ASWSWC) & சன்ஷோதாக், கண்காணிப்பு கப்பல் (SVL) அவை கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் லிமிடெட் (GRSE) மூலம் தமிழ்நாட்டின் சென்னை காட்டுப்பள்ளியில் உள்ள லார்சன் & டூப்ரோ (L & T) கப்பல் கட்டும் தளத்தில் உருவாக்கப்பட்டன. GRSE ஆனது இந்திய கடற்படைக்காக எட்டு நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல்களையும் நான்கு கண்காணிப்பு கப்பல்களையும் உருவாக்குகிறது. ஐஎன்எஸ் (இந்திய கடற்படைக் கப்பல்) “அஞ்சாதீப்” உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட எட்டாவது நீர்மூழ்கி எதிர்ப்பு போர் கப்பல் (ASW-SWC) மற்றும் ஐஎன்எஸ் ”சன்ஷோதாக்”, 4வது மற்றும் கடைசி ஆய்வுக் கப்பல் (பெரியது) (SVL) ஆகிய இரு போர்க்கப்பல்கள் திட்டம் பயன்பாட்டுக்கு வந்தது. விருதுகளும் கௌரவங்களும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸுக்கு சிறந்த ஆளுநர் விருது இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸுக்கு லண்டனில் நடந்த நிகழ்ச்சியில் நிகழாண்டின் சிறந்த ஆளுநர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. உலகளவில் மத்திய வங்கிகள் மற்றும் நிதிக்கட்டுப்பாடு அமைப்புகள் எதிர்கொள்ளும் சாவல்களை ஆராயும் சென்ட்ரல் பேங்கிங் அமைப்பு, ஆண்டுதோறும் சிறந்து செயல்படும் மத்திய வங்கிகளின் ஆளுநருக்கு விருது வழங்கி கெளரவித்து வருகிறது.