Tag: உறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்

வரலாறு

மாநிலங்களின் சுயவிவரம் உறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம் தேசிய அளவில் உறுப்பு தானம் மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சைகளை திறம்பட மேற்கொண்டதில் நாட்டிலேயே முதன்மையான மாநிலமாக 6-ஆவது முறையாக தமிழகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வின் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் உறுப்பு தானம் அளிப்பவர்களின் எண்ணிக்கை நாட்டில் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். நாட்டின் 13-ஆவது உறுப்புதான தின விழா மத்திய சுகாதாரத் துறையின் தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பின் சார்பில் தில்லியில் நடைபெற்றது.  குறிப்பு தற்போது தமிழ்நாட்டில் 40 அரசு மருத்துவமனைகள், 120 தனியார் மருத்துவமனைகளுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான உரிமம் பெறப்பட்டுள்ளது.  தற்போது நாட்டிலேயே உறுப்பு தானம் அதிகமாக பெறக்கூடிய மாநிலமாகவும் சிறப்பான கட்டமைப்பைப் பெற்ற மாநிலமாகவும் தமிழகம் திகழ்கிறது. நியமனங்கள் மத்திய அமைச்சரவைச் செயலரின் பதவிக் காலம் நீட்டிப்பு மத்திய அரசு நிர்வாகத்தில் உயரிய பொறுப்பான அமைச்சரவைச் செயலர் பதவிக்கு ராஜீவ் கௌபா கடந்த 2019-ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டார். முதலில் இரு ஆண்டு பதவிக்காலத்துக்கு அவர் அப்பதவியில் நியமிக்கப்பட்டார். 3-ஆவது முறையாக மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.  குறிப்பு அகில இந்திய சேவைகள் விதிகளின் கீழ் அமைச்சரவைச் செயலர் அதிகபட்சமாக 4 ஆண்டுகளுக்கு மட்டுமே பதவி வகிக்க முடியும்.  ராஜீவ் கெளபாவின் 4 ஆண்டு பதவிக்காலம் வரும் 30-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.  அவருக்கு மேலும் ஓராண்டு பணிநீட்டிப்பு வழங்குவதற்காக அகில இந்திய சேவைகள் விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளதாக மத்திய பணியாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.