சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் ஈர நிலங்களின் சுற்றுச்சூழல் மறுசீரமைப்புக்கு ரூ.115 கோடி தமிழ்நாடு ஈரநிலங்கள் இயக்கம் சார்பில் 100 ஈர நிலங்களில் சுற்றச்சூழல் மறுசீரமைப்புப் பணிகளுக்கு ரூ.115.15 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளதாக வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் தெரிவித்தார். வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வளாகத்திலுள்ள ஓட்டேரி ஏரியில் உலக சுற்றுச்சூழல் நாள் விழாவையொட்டி தமிழ்நாடு ஈர நிலங்கள் இயக்கம் தொடக்க விழா நடைபெற்றது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு 13 புதிய ராம்சார் தளங்களை தமிழகம் பெற்றுள்ளது. நாட்டில் மொத்தம் உள்ள 75-இல் 14 ராம்சார் தளங்களை தமிழகம் பெற்றுள்ளது. குறிப்பு ராம்சார் தளம் என்பது ராம்சர் மாநாட்டின் கீழ் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநில தளமாகும். இது ”ஈரநிலங்கள் மீதான மாநாடு” என்றும் அழைக்கப்படுகிறது. இது யுனெஸ்கோவால் 1971 அன்று ஈரானின் ராம்சார் நகரில் நிகழ்ந்த அரசுகளுக்கிடையேயான சுற்றுச்சூழல் ஒப்பந்தமாகும். நடைமுறைக்கு வந்தது - 1975