புவியியல்

சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல்

ஈர நிலங்களின் சுற்றுச்சூழல் மறுசீரமைப்புக்கு ரூ.115 கோடி

  • தமிழ்நாடு ஈரநிலங்கள் இயக்கம் சார்பில் 100 ஈர நிலங்களில் சுற்றச்சூழல் மறுசீரமைப்புப் பணிகளுக்கு ரூ.115.15 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளதாக வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் தெரிவித்தார்.
  • வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வளாகத்திலுள்ள ஓட்டேரி ஏரியில் உலக சுற்றுச்சூழல் நாள் விழாவையொட்டி தமிழ்நாடு ஈர நிலங்கள் இயக்கம் தொடக்க விழா நடைபெற்றது.
  • 20 ஆண்டுகளுக்குப் பிறகு 13 புதிய ராம்சார் தளங்களை தமிழகம் பெற்றுள்ளது.
  • நாட்டில் மொத்தம் உள்ள 75-இல் 14 ராம்சார் தளங்களை தமிழகம் பெற்றுள்ளது.

குறிப்பு

  • ராம்சார் தளம் என்பது ராம்சர் மாநாட்டின் கீழ் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநில தளமாகும்.
  • இது ”ஈரநிலங்கள் மீதான மாநாடு” என்றும் அழைக்கப்படுகிறது.
  • இது யுனெஸ்கோவால் 1971 அன்று ஈரானின் ராம்சார் நகரில் நிகழ்ந்த அரசுகளுக்கிடையேயான சுற்றுச்சூழல் ஒப்பந்தமாகும்.
  • நடைமுறைக்கு வந்தது – 1975
Next புவியியல் >