Tag: இயற்கை பேரழிவு – பாதுகாப்பு நடவடிக்கைகள்

புவியியல்

இயற்கை பேரழிவு - பாதுகாப்பு நடவடிக்கைகள் கேரளாவில் அதிக வெப்ப அலை இறப்புகள் நாட்டிலேயே அதிகபட்சமாக ஜூன் இறுதி வரை கேரளாவில் 120 பேர் வெப்ப அலைக்கு உயிரிழந்துள்ளனர். கேரளாவைத் தொடர்ந்து குஜராத்தில் 35 பேர், தெலுங்கானாவில் 20 பேர், மகாராஷ்டிராவில் 14 பேர், தமிழ்நாடு மற்றும் உத்தரப் பிரதேசத்தில் தலா 12 பேர், மேற்கு வங்கத்தில் 11 பேர், மத்தியப் பிரதேசத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பு விழிப்புணர்வு, சுகாதார திறனை மேம்படுத்துதல் மற்றும் வெப்பம் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கும் இறப்பு எண்ணிக்கையைக் குறைப்பதற்கும் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் மாநிலங்கள் தங்கள் வெப்ப சுகாதாரத் துறைத் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளன. இந்திய வானிலை ஆய்வு மையம் வெப்ப அலை சார்ந்த எச்சரிக்கைகளை வெளியிடுகிறது. வெப்ப அலை பற்றி ஒரு பகுதியின் அதிகபட்ச வெப்பநிலை சமவெளிகளுக்கு குறைந்தபட்சம் 40°C அல்லது அதற்கும் அதிகமாகவும், மலைப்பகுதிகளில் குறைந்தபட்சம் 30°C அல்லது அதற்கும் அதிகமாகவும் இருத்தல்.