Tag: இந்தியா-இலங்கை பொருளாதார ஒப்பந்தங்கள்

அரசியல் அறிவியல்

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை இந்தியா-இலங்கை பொருளாதார ஒப்பந்தங்கள் பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கிய பிறகு ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக அந்நாட்டின் அதிபராக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக அவர் இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். புது தில்லிக்கு வருகை தந்த அவர், வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்துப் பேசினார். அதையடுத்து, பிரதமர் மோடியை அதிபர் ரணில் தில்லியில் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இந்தியாவின் யுபிஐ பணப் பரிவர்த்தனை வசதியை இலங்கையில் அறிமுகப்படுத்துவதற்கான ஒப்பந்தம் உள்ளிட்ட 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. இருநாடுகளுக்கு இடையே போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் கடல் வழியாகப் பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வது குறித்த ஒப்பந்தமும், மின்சாரப் பகிர்மான அமைப்புகளை ஒருங்கிணைப்பது தொடர்பான ஒப்பந்தமும் கையொப்பமாகின. இந்தியா-இலங்கை இடையே பெட்ரோலிய இணைப்புக் குழாய் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆய்வு நடத்தப்பட உள்ளது. அதன் மூலமாக இலங்கைக்கு பெட்ரோலிய பொருள்கள் எளிதில் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கு அதிகாரப்பகிர்வு, 13-ஆவது சட்டத் திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவது அவசியம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். நாகப்பட்டினம்-காங்கேசன்துறை படகு சேவை தமிழகத்தின் நாகப்பட்டினத்துக்கும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையே படகுப் போக்குவரத்து சேவையை விரைவில் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார். கொழும்பு, திரிகோணமலை, காங்கேசன்துறை ஆகிய துறைமுகங்களில் கட்டமைப்பு மேம்பாட்டு நடவடிக்கைகளை இரு நாடுகளும் ஒருங்கிணைந்து மேற்கொள்வதற்கும் பேச்சுவார்த்தையின் போது ஒப்புக்கொள்ளப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் கடலோரப் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஒருங்கிணைந்து செயல்படுத்தவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.  இலங்கை பற்றி அதிபர் - ரணில் விக்கிரமசிங்க பிரதமர் - தினேஷ் குணவர்தன தலைநகரங்கள் - i. நிர்வாக மற்றும் நீதித்துறை தலைநகர் – கொழும்பு ii சட்டமன்ற தலைநகர் - ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டே நாணயம் - இலங்கை ரூபாய்