Tag: இந்தியாவில் 93% DPT3 நோய்த்தடுப்பு: WHO

பொருளாதாரம்

குறியீடுகள் இந்தியாவில் 93% DPT3 நோய்த்தடுப்பு: WHO டிப்தீரியா, பெர்டுசிஸ் மற்றும் டெட்டனஸ் தடுப்பூசிகளின் மூன்றாவது டோஸான டிபிடி3க்கான பயன்பாட்டு வீதம், இந்தியாவில் 2022 ஆம் ஆண்டில் முடிவில் 93% ஆக உயர்ந்துள்ளது. இது 2019 இல் பதிவுசெய்யப்பட்ட கோவிட்க்கு முந்தைய காலத்தின் 91% நிலையே விஞ்சியது. 2021 இல் பதிவு செய்யப்பட்ட 85% இலிருந்து அதிகரித்ததாக, உலகில் சுகாதார அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. WHO தென்-கிழக்கு ஆசிய பிராந்தியத்தில், 2022க்கான தேசிய நோய்த்தடுப்பு பாதுகாப்புக்கான மதிப்பீடுகள் DPT3க்கான பயன்பாட்டு விகிதம் 91% கோவிட்க்கு முந்தைய நிலைக்கு மீண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. இந்த பிராந்தியத்தில் 2022-ல் 92%ஆக உயர்ந்த தட்டம்மை தடுப்பூசியின் பயன்பாடு 6% முன்னேற்றத்தைக் கண்டது. ஜீரோ டோஸ் குழந்தைகளின் எண்ணிக்கை (டிபிடி தடுப்பூசியின் முதல் டோஸ் கூட பெறாதவர்கள்) 2022 இல் 2.3 மில்லியன், கிட்டத்தட்ட பாதியாகக் குறைந்தது. பகுதியளவு தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை (குறைந்தது ஒரு டோஸ் டிபிடி தடுப்பூசியைப் பெற்றிருந்தாலும், மூன்று டோஸ்களின் முதன்மைத் தொடரை முடிக்காதவர்கள்) 2022 இல் 6.5 லட்சமாகக் குறைக்கப்பட்டது. அனைத்து WHO பிராந்தியங்களிலும் இப்பகுதி சிறந்த நோய்த்தடுப்பு மீட்புகளைக் கொண்டுள்ளது. இந்தியா மற்றும் இந்தோனேசியாவின் முயற்சிகள் இதற்கு முக்கிய காரணமாக இருந்தது.