Tag: இந்தியாவில் குறைமின்கடத்தி உற்பத்தி மையம்

தினசரி தேசிய நிகழ்வு

இந்தியாவில் குறைமின்கடத்தி உற்பத்தி மையம் குஜராத் மாநிலம் காந்திநகரில் நடைபெற்ற 'செமிகான் இந்தியா 2023' மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, 'இந்தியாவில் குறை மின்கடத்தி உற்பத்தி மையத்தை அமைக்கும் நிறுவனங்களுக்கு 50 சதவீத நிதியுதவி அளிக்கப்படும்', என்று அறிவித்தார். இந்தியாவில் குறைமின்கடத்தி உற்பத்திக்கான முழுமையான சூழலை உருவாக்குவதற்கான சிறப்பு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கென தேசிய குவாண்டம் இயக்கத்துக்கு (துல்லியமாக அளவிடுதல்) நாடு அண்மையில் அனுமதி அளித்தது. இது விதைத்தல், வளர்த்தல் மற்றும் அளவிடுதல் நோக்கமாகக் கொண்டதோடு, நாட்டில் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிகளையும் மேம்படுத்த உதவும். இதற்கென 'தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை மசோதா'வும் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.