Tag: இந்தியாவின் பிஎம்டி தடுப்பு ஏவுகணை சோதனைகள்

பாதுகாப்பு

இந்தியாவின் பிஎம்டி தடுப்பு ஏவுகணை சோதனைகள் சூழல்: கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை, நடுவானில் இடை மறித்து அழிக்கும் பிஎம்டி ரக ஏவுகணை, போர்க் கப்பல்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனைகள் ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் உள்ள ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் (ICBM) அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், இந்தியா, பிரிட்டன். வடகொரியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளிடம் மட்டுமே கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் (ஐசிபிஎம்) உள்ளன.  இந்த வகை ஏவுகணைகள், பூமியின் வளிமண்டலத்தைத் தாண்டி வெளியே செல்லும், பின்னர் வளிமண்டலத்தில் இருந்து பூமிக்குள் அதிவேகமாக மீண்டும் நுழைந்து நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை துல்லியமாகத் தாக்கி அழிக்கும். பிஎம்டி ஏவுகணை அமைப்பின் முக்கியத்துவம் இதுபோன்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை நடுவானில் இடைமறித்து அழிப்பது மிகவும் கடினம்.  அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இஸ்ரேல் நாடுகளிடம் மட்டுமே ஐசிபிஎம். ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் தடுப்பு ஏவுகணைகள் உள்ளன.  அந்த வரிசையில் இப்போது இந்தியாவும் இணைந் திருக்கிறது. டிஆர்டிஓ மேற்கொண்ட சோதனைகள் மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை களை நடுவானில் இடைமறித்து அழிக்கும் பிஎம்டி ஏவுகணை, போர்க் கப்பல்களைத் தாக்கி அழிக்கும் என்ஏஎஸ்எம்- எம்ஆர் ரக ஏவுகணை சோதனைகளை வெற்றிகரமாக நடத்தி உள்ளது. ஒடிசா மாநிலம் சந்திப்பூர் ஏவுதளத்தில் இருந்து நடத்தப்பட்ட இந்த 3 சோதனைகளும் முழு வெற்றி அடைந்துள்ளன.  இவற்றில் ஒரு ஏவுகணை பூமிக்கு வெளியிலேயே இடைமறித்து தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.  மற்றொன்று பூமிக்குள் வந்த பிறகு இடைமறித்து தாக்கி அழிக்கும்.  மூன்றாவது போர்க் கப்பல்களை இடைமறித்து அழிக்கும் வல்லமை படைத்தது. பிஎம்டி திட்டத்தின் தொடக்கம் ஐசிபிஎம் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் பிஎம்டி ஏவுகணை திட்டத்தைக் கடந்த 1999-ம் ஆண்டில் டிஆர்டிஓ தொடங்கியது. பல்வேறு கட்டங்களாகத் தொடர்ந்து சோதனைகள் நடத்தப்பட்டு வந்தன.  ஸ்வார்டுபிஷ் ரேடார் அமைப்பு இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாகக் கடந்த 2000-ம் ஆண்டில் இஸ்ரேலிடம் இருந்து ஸ்வார்டுபிஷ் என்ற அதிநவீன ரேடார் வாங்கப்பட்டது. இஸ்ரேல் அனுமதியுடன் இந்த ரேடார்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன. இதன்மூலம் 1,500 முதல் 5,000 கி.மீ. தொலைவு வரையிலான எதிரிகளின் ஏவுகணைகளைத் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியும்.  குறிப்பாக ஒரே நேரத்தில் 200 ஏவுகணைகளைத் தொடர்ந்து கண்காணிக்க முடியும். ஏடி-1 மற்றும் ஏடி-2 தடுப்பு ஏவுகணைகள் எதிரிகளின் ஏவுகணைகள் பல ஆண்டுகள் நடத்திய ஆராய்ச்சியின் பலனாக டிஆர் டிஓ சார்பில் ஏடி1, ஏடி2 ஆகிய பெயர்களில் பிஎம்டி தடுப்பு ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு உள்ளன.  ஸ்வார்டுபிஷ் ரேடார் மற்றும் பிஎம்டி ஏவுகணைகள் மூலம் எதிரிகளின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை நடுவானில் இடைமறித்து அழிக்க முடியும்.  இந்தியாவின் புதிய திறன் தற்போது நடத் தப்பட்டு உள்ள சோதனைகள் மூலம் 5,000 கி.மீ. தொலைவில் இருக்கும் ஐசிபிஎம் ஏவுகணைகளை…