Tag: ஆஸ்திரேலிய பிரதமர் ஆல்பனேசி இந்திய வருகை

பொருளாதாரம்

இந்திய – பசிபிக் பொருளாதார திட்டம் அதிக பலனளிக்கும் : அமெரிக்கா “இந்தியாவுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தைவிட (எஃப்டிஏ) இந்திய-பசிபிக் பொருளாதார ரீதியில் அதிக நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும்“ என்று அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஜீனா ரேமாண்டோ கூறினார். ஆஸ்திரேலிய பிரதமர் ஆல்பனேசி இந்திய வருகை ஆஸ்திரேலிய பிரதமராக கடந்த ஆண்டு மே மாதம் பொறுப்பேற்ற ஆன்டனி ஆல்பனேசி முதல் முறையாக இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். பிரதமர் மோடி – பிரதமர் ஆல்பனேசி இடையேயான பேச்சு வார்த்தை தில்லியில்  நடைபெறவுள்ளது.  அந்தப் பேச்சுவார்த்தையின்போது வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, முக்கிய கனிமங்கள் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை வலுப்படுத்துவது தொடர்பாகத் தலைவர்கள் இருவரும் விரிவாக விவாதிக்கவுள்ளனர். தமிழகத்தில் 4 லட்சம் மாணவ. மாணவிகளுக்கு பல் பாதுகாப்பு திட்டம் தொடக்கம் முதல் கட்டமாக 54 ஆயிரம் பேருக்கு பரிசோதனை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை  சார்பில் சென்னையில் “புன்னகை சிறார்களின் பல் பாதுகாப்புத் திட்டம்“ தொடங்கப்பட்டது. செயற்கை மணல் உற்பத்தியை ஒழுங்குபடுத்த புதிய கொள்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார் கட்டுமானப் பணிகளில் ஆற்று மணலுக்கு மாற்றாக சமீபகாலமாக எம்.சாண்ட் பயன்பாடு அதிகரித்து வருகிறது.  இந்நிலையில், தரமற்ற எம்-சாண்ட் விற்பனையைத் தடுக்கவும், கண்காணிக்கவும், தயாரிப்பு, தரம், விலை உள்ளிட்டவற்றை வரன்முறைப்படுத்தவும் மாநில அளவில் கொள்கை தேவைப்படுகிறது. எனவே, எம்-சாண்ட் உற்பத்தியை ஒழுங்குபடுத்த புதிய கொள்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.  இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார். கொள்கையின் குறிக்கோள்: ஆற்றுமணலுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், அதற்கு மாற்றாக செயற்கை மணல் (எம்-சாண்ட்) அல்லது அரவை மணல் (சி-சாண்ட்) உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. குவாரி செயல்பாட்டின்போது பயன்பாட்டுக்கு உதவாத கற்களில் இருந்தும், சிறிய அளவிலான கிரானைட் கற்களில் இருந்தும் இவை தயாரிக்கப்படுவதால், குவாரிகளில் ஏற்படும் கழிவுகளின் அளவைக் குறைக்க முடியும்.  மாநிலத்தில் குவாரிக் கழிவுகளே இல்லாத நிலையை  உருவாக்குவதே இந்தக் கொள்கையின் குறிக்கோளாகும். ஆற்றுமணலைப் பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவதன் மூலம், சுற்றுசூழலுக்கு சேதம் ஏற்படுவதைத் தடுத்தல்,  அதிக வலிமை மற்றும் செலவு குறைந்த செயற்கை மணல் பயன்பாட்டை ஊக்குவித்தல், தமிழகத்தில் உள்ள செயற்கை மணல் உற்பத்தி தொழிற் சாலைகள் தொடர்புடைய சட்டங்கள், விதிகள் மற்றும் ஒழுங்குமுறை விதிகளை முறையாகப் பின்பற்றச் செய்தல் ஆகியவை  மலபார் போர்பயிற்சி இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவை உள்ளடக்கிய மலபார் பலதரப்பு கடற்படை பயிற்சியை ஆஸ்திரேலியா இந்த ஆண்டு முதல் முறையாக நடத்தவுள்ளது,  மேலும் இந்த பதிப்பை  ஆஸ்திரேலியா நடத்தும்” என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் உறுதி செய்தன.