Tag: ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு

தமிழ்நாடு

ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு  ஆதிதிராவிடர் நலத் துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளை மேம்படுத்த, புதிய கட்டடங்கள் அமைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தெரிவித்தார். தமிழகம் முழுவதும் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளி வளாகங்களில் புதிய கட்டடங்கள் கட்டவும், கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தவும், மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளவும் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தத் துறையின் கீழ் செயல்படும் அனைத்து விடுதிகளும் சீரமைக்கப்பட்டு வருகிறது. ஆதிதிராவிடர் நலத் துறை பள்ளிகளில் 192 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  ராணி வேலுநாச்சியாரின் பிறந்த தினம் வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் வீரம் தமிழர் மனதில் சுடர் விடட்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். வேலுநாச்சியார் பிறந்த தினத்தை ஒட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் துணிவு, மதிநுட்பம், பன்மொழித்திறன், போர்த்திறன், மன உறுதி என அனைத்தையும் ஒருங்கேபெற்றவர், சிவகங்கைச் சீமையின் வீரமங்கை வேலுநாச்சியார். அவரது வீரமும், கிழக்கிந்திய கம்பெனிப் படையை எதிர்த்துப் பெற்ற வெற்றியும் என்றென்றும் தமிழர் நெஞ்சில் அணையாச் சுடராய் ஒளிவீசும் எனத் தெரிவித்துள்ளார்.