Tag: ஆசிய கபடி : பட்டத்தை தக்கவைத்தது இந்தியா

விளையாட்டு

ஆசிய கபடி : பட்டத்தை தக்கவைத்தது இந்தியா தென் கொரியாவில் நடைபெற்ற ஆடவருக்கான 9-ஆவது ஆசிய கபடி சாம்பியன் ஷிப் போட்டியில் வாகை சூடிய இந்தியா, சாம்பியன் பட்டத்தை தக்கவைத்ததுக் கொண்டது. இத்துடன் 9 சீசன்களில், இந்தியாவே 8 முறை சாம்பியன் ஆகியிருப்பது குறிப்பிடத்தக்கது. 2003-இல் மட்டும் ஈரான் கோப்பை வென்றிருந்தது. ஆசிய கலப்பு இரட்டையர் ஸ்குவாஷ் சீனாவில் நடைபெற்ற ஆசிய கலப்பு இரட்டையர் ஸ்குவாஷ் சாம்பியன் ஷிப்பில் இந்தியாவின் தீபிகா பலிக்கல்/ஹரிந்தர்பால் சிங் சந்து கூட்டணி தங்கப் பதக்கம் வென்றது. போட்டியின் அறிமுக சீசனிலேயே இந்தியா சாம்பியனாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. நீரஜ் சோப்ராவுக்கு தொடர்ந்து 2-ஆவது பட்டம் டைமண்ட் லீக் போட்டிக்கான நடப்பு சீசனின் 6-ஆவது மீட்டில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் வாகை சூடினார். டைமண்ட் லீக்கில் தொடர்ந்து இரு முறை பட்டம் வென்ற இந்தியர் என்ற பெருமையும் பெற்றுள்ளார். டைமண்ட் லீக் போட்டியின் 6-ஆவது மீட், சுவிட்ஸர்லாந்தின் லௌசேன் நகரில் நடைபெற்றது. இதில் ஈட்டி எறிதல் பிரிவில் நீரஜ் சோப்ரா சிறந்த முயற்சியாக 87.66 மீட்டருக்கு எறிந்து முதலிடம்  பிடித்தார்.